கரோனா வைரஸ் நோய் உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனம் தற்போது உலகளாவிய நோய் தொற்றாக அறிவித்துள்ளது. மத்திய அரசும் இந்நோயை பேரிடராக அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் கரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இப்பணிகள் தொடர்ந்து தொய்வின்றி மேற்கொள்வதற்கு ஏதுவாகக் கருணை அடிப்படை, நேரடி நியமனங்கள் மூலம் பணி அமர்வு செய்யப்பட்ட பணியாளர்களில் பொறியியல் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்ற பணியாளர்களின் பணிக்காலம் மற்றும் கல்வித்தகுதிகளின் அடிப்படையில் மாநகராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பொறியியல் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற ஐந்து நபர்களை உதவிப் பொறியாளராகவும், பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்ற 35 நபர்களுக்கு இளநிலை பொறியாளர் பதவி உயர்வுக்கான பணி ஆணைகளையும் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி வழங்கினார்.
இந்நிலையில் பதவி உயர்வு பெற்ற நபர்கள் இன்று முதல் பணி ஒதுக்கப்பட்ட இடத்தில் கரோனா தொற்று நோய் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேர்வு மையங்களில் கிருமி நாசினி தெளிக்க உத்தரவு!