மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ள தகவலில், உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் ஏற்பட்ட கோவிட் 19 வைரஸ் தாக்குதல் பாதிப்புகள் 144 நாடுகளில் உள்ளது எனவும், சர்வதேச பொது சுகாதார அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்த நோய் வராமல் தடுப்பதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், மத்திய அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.
![corona-script](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-05-corona-script-7204807_16032020210840_1603f_03073_71.jpg)
வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் வரும் அனைத்து பயணிகளும் இந்தியாவில் 30 விமான நிலையத்தில் உடல் வெப்பப் பரிசோதனை செய்யப்படுகின்றனர். தமிழகத்தில் சென்னை, திருச்சி ,மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 4 விமான நிலையங்களில் தற்போது 1 லட்சத்து 80 ஆயிரத்து 62 பயணிகள் விமான நிலையங்களில் வெப்பப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 2 ஆயிரத்து 221 பயணிகள் வீட்டில் 28 நாட்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறையின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். மேலும் மருத்துவமனையில் தனி வார்டில் 22 பயணிகள் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். 98 பயணிகளின் ரத்தப்பரிசோதனை மாதிரிகள் பெறப்பட்டன.
![corona-script](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-05-corona-script-7204807_16032020210836_1603f_03073_955.jpg)
அவற்றில் சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு ஆராய்ச்சி நிலையம், புனே, தேனியிலுள்ள தேசிய வைரல் நோய்த் தடுப்பு நிறுவனத்தில் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 96 பயணிகளின் ரத்த மாதிரிகள் முடிவுகள் பெறப்பட்டுள்ளன. அவற்றில் 95 பயணிகளுக்கு நோய் தொற்று இல்லை எனவும், ஒருவருக்கு நோய்தொற்று உள்ளது என கண்டறியப்பட்டது. 2 பயணியின் ரத்த பரிசோதனை முடிவு வெளியாகவில்லை.
ஓமன் நாட்டிலிருந்து வந்த பயணித்து கோவிட் 19 நோய் இருப்பது கண்டறியப்பட்டு ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் ரத்த மாதிரிகள் 24 மணி நேரத்துக்குப் பின்னர், மீண்டும் ரத்தம் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் தொற்று சரியாகியுள்ளது என தெரியவந்துள்ளது.
ஆனாலும், மருத்துவமனையில் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். இவருடன் தொடர்புடையவர்களை தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை வீட்டில் வைத்து கண்காணித்து வருகிறது அவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர். மேலும் சீனா, ஹாங்காங்,ஈரான், கொரியா ,இத்தாலி, ஜப்பான் ,தாய்லாந்து, சிங்கப்பூர், ஈரான், மலேசியா, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி,மற்றும் கோவிட் 19 வைரஸ் தாக்குதல் உள்ள 19 நாடுகளில் இருந்து வந்தவர்கள் தொடர்ந்து 28 நாட்களுக்கு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என, மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:கரோனா சேலன்ஞ் - மோடியின் அடுத்த சரவெடி