மஸ்கட்டிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு ஓமன் ஏா்லைன்ஸ் விமானம் மூலம் வந்த பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது புதுச்சேரியை சேர்ந்த மரிய தெரசா(56) என்ற பெண் மீது அவர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது.
அப்போது மரிய தெரசாவின் ஆவணங்களை சோதனை செய்தபோது சிலை தடுப்பு காவல்துறையினர் எல்.ஓ.சி போட்டுள்ளது தெரியவந்தது. அவரை விசாரணை செய்தபோது, 2016ஆம் ஆண்டு மரிய தெரசா வீட்டிலிருந்து 11 புராதன சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தேடி வருவதும், அதிலிருந்து அவர் தலைமறைவாகியதும் தெரிந்தது.
உடனே அவர்கள் மரிய தெரசாவை கைதுசெய்து, கடத்தல் சிலை தடுப்பு பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்கனர்.