சென்னையின் புறநகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதை தடுக்க வேண்டும் என காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் , தனிப்படைகள் அமைத்து கஞ்சா விற்பனையாளர்களை கைது செய்து வருகின்றனர். பழைய வண்ணாரப்பேட்டை கிழக்கு கல்லறை சாலை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, ஆய்வாளர் ரவி தலைமையிலான போலீசார், அங்கு சென்று நோட்டமிட்டனர். ஒரு வீட்டுக்கு ஆட்கள் அதிகமாக வந்து செல்வதை கண்டு அங்கு சென்று பார்த்தபோது, கஞ்சா பொட்டலங்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கர்ணன் (38), அவருடைய மனைவி குமுதவள்ளி(30) மற்றும் சங்கர், ஆகாஷ், ராஜேஷ் ஆகிய 5 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.