ETV Bharat / state

"சிறுபான்மையின மக்களிடம் அச்ச உணர்வை ஸ்டாலின் ஏற்படுத்துகிறார்" முதலமைச்சர் குற்றச்சாட்டு! - "சிறுபான்மையின மக்களிடம் அச்ச உணர்வை ஸ்டாலின் ஏற்படுத்துகிறார்"

சிறுபான்மையின மக்களிடம் ஒருவித அச்ச உணர்வை, திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்படுத்தி கொண்டிருக்கிறார் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

முதலமைச்சர் குற்றச்சாட்டு!
முதலமைச்சர் குற்றச்சாட்டு!
author img

By

Published : Mar 13, 2020, 1:08 PM IST

சட்டப்பேரவையில் கேள்வி நேரமில்லா நேரத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேசும்போது, " சட்டப்பேரவை நடைபெற்று கொண்டிருக்கும் போது, வெளியில் புதிய அறிவிப்புகளை வெளியிடக்கூடாது என்பது அவை மரபு. ஆனால், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் என்பிஆர்( தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு) நிறுத்தப்பட்டுள்ளது என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

எனவே, தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் ஒரு தீர்மானமாகப் பேரவையில் கொண்டுவந்தால், திமுக அதை ஆதரிக்கத் தயாராக இருக்கிறது என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சிறுபான்மையின மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கவே, அதுபோன்று செய்தியாளர்களிடம் கூறினேன் என்றார்.

அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் பேசும்போது, "மத்திய அரசிடம் சில விளக்கங்கள் கேட்டு இருக்கிறோம் என்று அமைச்சர் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசிடமிருந்து பதில் ஏதுமில்லாதபட்சத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து ஒரு தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டுவர வேண்டும்" என்றார்.

அப்போது திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் அமளியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து பேசிய சபாநாயகர் தனபால், பல முறை எச்சரிக்கை செய்தபின்னரும் முறையில்லாமல் திமுக உறுப்பினர்கள் உட்கார்ந்தவாறே பேசுகின்றனர். இதுதொடரும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், பேரவையில் உரியப் பதிலை அளித்த பிறகே கேள்வி கேட்கும் மரபை பின்பற்ற வேண்டும் என்றார். அதையடுத்து பேசிய அமைச்சர் உதயகுமார், சிறுபான்மையின மக்களிடம் ஒரு பதற்றத்தை உருவாக்கும் போது நாங்கள் அமைதியாக இருக்க முடியாது என்றார். என்பிஆர் விவகாரத்தில் இவ்வாறு அதிமுக-திமுகவினரிடையே காரசார விவாதம் நடைபெற்றது.

இதையடுத்து முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது: சிறுபான்மையின மக்களிடம் ஒருவித அச்ச உணர்வை, திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்படுத்தி கொண்டிருக்கிறார். எந்த காலத்திலும், இஸ்லாமியர்களை நாடு கடத்தி விடுவார்கள். வெளிநாட்டுக்கு அனுப்பி விடுவார்கள் என, பதற்றமான சூழலை உருவாக்க திமுக தூண்டிவிடுகிறது.

எந்தக் காலத்திலும் இஸ்லாமியர்களை நாடு கடத்த போவதில்லை. பதற்றமான சூழலில் இஸ்லாமிய மக்களின் அச்சத்தை போக்கவே, 3 கேள்விக்கான விளக்கத்தை தமிழ்நாடு அரசு, மத்திய அரசிடம் கேட்டுள்ளது. இந்த அவையில் பேசிய கருத்தையே, அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். அவையில் சொல்லும் கருத்தை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்கு பேரவையில் அனுமதி மறுப்பதாக, பேரவைத் தலைவர் தனபால் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், குடியுரிமை திருத்தச் சட்டங்கள் தொடர்பாக பேசும்போது, எதிர்க்கட்சியினர் உணர்வுப்பூர்வமாக சிந்தித்துப் பேச வேண்டும். பதற்றத்தை உருவாக்கும் வகையில் பேசக்கூடாது என்றார்.

அப்போது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்கிற செய்தியையாவது அமைச்சர் உதயகுமார் சட்டப்பேரவையில் பதிவு செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் என்பிஆர் கணக்கெடுப்பு நிறுத்தி வைப்பு - அமைச்சர் உதயகுமார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.