2020ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி ஒன்றாம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், தமிழ்நாடு பட்ஜெட் வருகின்ற 14ஆம் தேதி சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தால் தாக்கல் செய்யப்பட இருப்பதாக சட்டப் பேரவைச் செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டத் தொடர் ஜனவரி 6ஆம் தேதி தொடங்கி ஜனவரி 9ஆம் தேதி வரை நடந்தது. இந்த கூட்டத் தொடரில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இதனால், கூட்டத் தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. எனினும் 2020-21ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பிப்ரவரி மாதத்திற்குள் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், வருகின்ற 14ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.