ETV Bharat / state

Tamil Nadu Budget: மதுரை, கோவையில் மெட்ரோ ரயில்.. பட்ஜெட்டில் கூறியது என்ன? - பட்ஜெட் உரை

வளர்ந்துவரும் தொழில் நகரங்களான மதுரை மற்றும் கோவையில், பன்னாட்டு நிதி நிறுவனங்களின் நிதியுதவி மூலம் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

metro
metro
author img

By

Published : Mar 20, 2023, 1:31 PM IST

சென்னை: தமிழ்நாட்டின் 2023 -24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையைச் சட்டப்பேரவையில் இன்று(மார்ச்.20) நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அவர் தனது பட்ஜெட் உரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை மதுரை, கோவை நகரங்களுக்கு விரிவு படுத்துவது குறித்து அறிவிப்பு வெளியிட்டார்.

அதில், "சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகள் 63,246 கோடி ரூபாய் செலவில் 119 கிலோ மீட்டர் தூரத்திற்கு மூன்று வழித்தடங்களில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் முதல் வழித்தடமாக, பூந்தமல்லி பணிமனை முதல் கோடம்பாக்கம் மின் நிலையப் பிரிவு வரையிலான உயர் வழித்தடம் 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரவு-செலவுத் திட்டத்தில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூர் மாநகரம், இந்தியாவிலேயே வேகமாக வளர்ந்து வரும் இரண்டாம் நிலை நகரங்களில் முதன்மையானது. ஜவுளி, தொழில், வர்த்தகம், தொழில்நுட்பம், மருத்துவ வசதிகள், உற்பத்தித் துறை என பலதொழில்களின் இருப்பிடமாகவும் தொழில்முனைவுக்கு எடுத்துக்காட்டாகவும் திகழும் கோயம்புத்தூரின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, இந்நகரில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டம் அவிநாசி சாலை, சத்தியமங்கலம் சாலைகளை உள்ளடக்கி 9,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

தூங்கா நகரமான மதுரை மாநகரம், தென்னகத்தின் வளர்ச்சிக்கு மையமாக விளங்கும் வகையில் 8,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். மதுரை நகரின் மையப் பகுதிகளில் நிலத்திற்கு அடியில் அமைக்கப்படும் மெட்ரோ ரயில், திருமங்கலத்தையும் ஒத்தக்கடையையும் இணைக்கும். இந்த இரண்டு நகரங்களில் மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, பன்னாட்டு நிதி நிறுவனங்களின் நிதியுதவி மூலம் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: செப்டம்பர் 15 முதல் மகளிர் உரிமைத் தொகை..! பட்ஜெட்டில் அறிவிப்பு..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.