முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் அவரை சந்தித்தார்.
சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில், இந்த சந்திப்பு கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் நடைபெற்றது.
பின்னர் பாஜக தலைவர் முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், '' கந்தசஷ்டி கவசத்தை தவறாக சித்தரித்த கறுப்பர் கூட்டத்தை கைது செய்ய வேண்டும். ஒரு சிலரை கைது செய்துள்ளார்கள். அந்த விவகாரத்தில் முழு விசாரணை நடத்தி இதற்கு பின்னால் யார் இருக்கிறார்களோ அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.
வேளாண் சட்ட மசோதாவிற்கு ஆதரவு அளித்த முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்தேன். அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதற்கு, என் வாழ்த்துகளை தெரிவித்தேன்'' என்றார்.
தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமிதான் அதிமுக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு முருகன் பதில் கூற மறுத்துவிட்டார்.
இதையும் படிங்க: சிறுமி பாலியல் வழக்கில் குற்றவாளி விடுவிப்பு - மு.க. ஸ்டாலின் கண்டனம்!