சென்னை: தியாகராய நகர் இந்தி பிரச்சார சபா கூடத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு பாஜக சார்பில் உணவு வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
அதனை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இது மக்கள் வாழ்விடமா? அல்லது மழைக்கால ஏரியா? இத்தனை ஆண்டுகள் சென்னையை தங்கள் கோட்டையாக கூறிக்கொள்பவர்கள் இத்தனை ஓட்டையாக வைத்திருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலையும் அத்தியாவசியமான பொருட்களையும் வழங்கி வந்தேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிதாக 835 பேருக்கு கரோனா பாதிப்பு