சென்னை : தமிlழ்நாட்டில் கரோனா தொற்று பரவ தொடங்கியபோது, சட்டப்பேரவை கூட்டத்தொடர் சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்டது.
அதிமுக ஆட்சியில் ஆளுநர் உரையும், கடைசி நிதிநிலைக் கூட்டத்தொடரும் கலைவாணர் அரங்கத்திலேயே நடத்தப்பட்டது.
பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிதாக அமைந்த திமுக அரசும், எம்எல்ஏக்கள் பதவியேற்பு, சபாநாயகர் தேர்வு, ஆளுநர் உரை, நிதிநிலை அறிக்கை, வேளாண் துறைக்கான தனி நிதி நிலை அறிக்கை தாக்கல், மானியக் கோரிக்கை மீதான விவாதம் உள்ளிட்ட சட்டப்பேரவை கூட்டத்தொடரும் கலைவாணர் அரங்கத்திலேயே நடத்தப்பட்டது.
மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டையில்
தற்போது கரோனா தொற்று குறைந்து வரும் சூழலில், பாரம்பரியமிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டமன்றத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக சட்டப்பேரவையை புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கணிணி பொருத்தும் பணிகள்
காகிதமில்லா சட்டப்பேரவை என்ற அடிப்படையில் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவையில் எம்.எல்.ஏக்களுக்கு கணிணி பொருத்தும் பூர்வாங்க பணிகள் துவங்கியுள்ளன.
இதையும் படிங்க :ஒமைக்ரான்: வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்குத் தீவிர கோவிட்-19 சோதனை