தமிழ்நாடு சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தில் பேசிய திரு. வி.க. நகர் சட்டப்பேரவை உறுப்பினர் தாயகம் கவி (எ) சிவக்குமார், திரு. வி.க. நகர் 75ஆவது வார்டு எஸ்.எஸ். புரம் பகுதியில் நியாயவிலை கடை அமைக்க அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, "நகர்ப்புற பகுதிகளில் ஒரு இடத்தில் நியாயவிலை கடை அமைக்க குறைந்தது 800 முதல் 1000 வரை குடும்ப அட்டைகள் தேவைப்படுகிறது. ஆனால் அந்த எஸ்.எஸ். புரம் பகுதியில் 700 குடும்ப அட்டைகள் மட்டுமே உள்ளன.
சென்னை பகுதிகளில் கூட்ட நெரிசல் பகுதி இருக்கின்ற இடங்களில் பிரித்து புதியதாக ஒரு கடை அமைக்க இடம் கிடைப்பது கடினமாக உள்ளது. கிடைக்கும் இடத்தில் வாடகை அதிகமாகக் கேட்கின்றனர். நிலத்தின் மதிப்பு அதிகமாக உள்ளது.
ஆனால், இந்தப் பகுதியில் மக்கள் அதிகமாக வசிக்கிறார்கள் என்று உறுப்பினர் கூறியிருக்கிறார். எனவே, அவர் ஒரு இடத்தை ஒதுக்கிக் கொடுத்தால் நியாயவிலை கடை அமைக்க அரசு ஆவன செய்யும்" என்று பதிலளித்தார்.
இதையும் படிங்க: மக்களின் உணர்வுகளை மதிக்காத அரசாங்கம் நிரந்தரமானதாக வரலாறு இல்லை - கி.வீரமணி ஆவேசம்