ETV Bharat / state

பேரவை நடவடிக்கைகளை செவித்திறன் மாற்றுத்திறனாளிகள் புரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு

பேரவை நடவடிக்கைகளை செவித்திறன் மாற்றுத்திறனாளிகளும் புரிந்து கொள்ளும் வகையில் புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

tn assembly
tn assembly
author img

By

Published : Apr 17, 2023, 10:22 PM IST

சென்னை: செவித்திறன் மாற்றுத்திறனாளிகள் புரிந்துகொள்ளும் வகையில், சைகை மொழியில் சட்டமன்றப் பேரவை நடவடிக்கைகளின் தொகுப்பினை ஊடகங்கள் மூலமாக ஒளிபரப்பு செய்திடும் நிகழ்வினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று(ஏப்.17) நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தின் சார்பில் செவித்திறன் மாற்றுத்திறனாளிகள் புரிந்துகொள்ளும் வகையில், சைகை மொழியில் சட்டமன்றப்பேரவை நடவடிக்கைகளின் தொகுப்பினை ஊடகங்கள் மூலமாக ஒளிபரப்பு செய்திடும் நிகழ்வினை சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு முன்னிலையில் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016-ல் வலியுறுத்தியுள்ளவாறு, மாற்றுத்திறனாளிகளுக்கு பொது இடங்களில் தடையற்றச் சூழலை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. செவித்திறன் மாற்றுத்திறனாளிகளின் தகவல் பரிமாற்றத்திற்காக, மாவட்ட ஆட்சியர்களால் நடத்தப்படும் கூட்டங்கள் உட்பட அனைத்து அரசு பொது நிகழ்ச்சிகளிலும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சைகை மொழிபெயர்ப்பாளர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, தற்போது நடைபெறும் 2023-24ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடர் நிகழ்ச்சிகளை செவித்திறன் மாற்றுத்திறனாளிகளும் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் சைகை மொழிபெயர்ப்பாளர் மூலமாக சைகை விளக்க காணொலி தயாரித்து செய்தி மக்கள் தொடர்புத் துறை வாயிலாக ஊடகங்களில் ஒளிபரப்பு செய்திட நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டார்.

அதன்படி, செவித்திறன் மாற்றுத் திறனாளிகள் அறிந்துகொள்ளும் வகையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிகழ்வுகளின் தொகுப்பு, யூ டியூப் (YouTube) மூலமாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் ஒளிபரப்பு செய்திடும் வகையில், சைகை மொழியில் பதிவு செய்து வழங்கும் நிகழ்வினை சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு முன்னிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: சீர்காழி சட்டநாதர் கோயிலில் 22 ஐம்பொன் சிலைகள், 462 செப்பேடுகள் கண்டெடுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.