ETV Bharat / state

தேதி குறிப்பிடாமல் தமிழ்நாடு சட்டப்பேரவை ஒத்திவைப்பு! - சபாநாயகர் தனபால்

தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது என சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

sds
sdsd
author img

By

Published : Mar 24, 2020, 9:06 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 8ஆவது கூட்டத்தொடரின் முதல் கூட்டம் ஜனவரி மாதம் 6ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 9ஆம் தேதி வரையில் கூட்டம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 16ஆம் தேதி தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதன் மீதான விவாதம் 20ஆம் தேதி வரை நடைபெற்றது. சட்டப்பேரவையில் ஒரே நாளில் 27 துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.

இதன் பின்னர், மீண்டும் சட்டப்பேரவை கூடும் தேதியைக் குறிப்பிடாமல் அவையை ஒத்திவைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை அவை முன்னவரும், துணை முதலமைச்சரும் ஓ. பன்னீர்செல்வம் கொண்டுவந்தார். அந்தத் தீர்மானம் சட்டப்பேரவை உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக பேரவைத் தலைவர் தனபால் அறிவித்தார்.

இதையும் படிங்க: நாட்டின் மூத்த பத்திரிகையாளர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.