கோவை விமான நிலைய விரிவாக்கம் என்னாச்சு? முதலமைச்சர் பதில்!
சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன் கோவையில் விமான நிலைய விரிவாக்கம் இல்லையா? எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனியார் இடங்களில் நிலம் உள்ளதால் அதை அரசு கையகப்படுத்த காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் கோவை விமான நிலையம் விரிவாக்கம் தாமதமாக நடைபெறுகிறது எனத் தெரிவித்தார்.
இந்த விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர், முதலமைச்சர் எந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றாலும் முழுமையாக நிலத்தை கையகப்படுத்த வேண்டும் எனக் கூறுகிறார் அவரின் இலாக்க வரும் போது பார்ப்போம் எனப் பேசினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் உங்கள் உறுப்பினர் பாதியில் நிறுத்தப்பட்ட பணிகள் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு உரிய பதிலையே கூறினேன். கோவையில் விமான நிலையம் அமைக்க கூட நிலம் முழுமையாக கையகப்படுத்த வேண்டும். அனைத்து திட்டதிற்கும் இது பொருந்தாது என பதிலளித்தார்.