சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய திருவெறும்பூர் திமுக உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருவெறும்பூர் பகுதியில் தாலுகா நீதிமன்றம் அமைக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், "ஆண்டுதோறும் பல்வேறு புதிய தாலுகா அமைக்கப்பட்டு வருகின்றன. இதன்படி அனைத்து தாலுகாக்களிலும் நீதிமன்றம் இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுத்து, உயர் நீதிமன்றத்துடன் இணைந்து வழக்குகளின் எண்ணிக்கையைப் பொறுத்து தாலுகா நீதிமன்றம் அமைத்து வருகிறது.
கடந்த ஆண்டு கூட ஐந்து புதிய தாலுகா நீதிமன்றங்கள் அமைக்க உத்தரவிட்டு மூன்று நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுவிட்டன. திருவெறும்பூர் பகுதியில் வழக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று புதிய நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: ‘கவுரவ விரிவுரையாளர்களுக்குப் பணி நிரந்தரம் செய்வது குறித்து அரசு பரிசீலனை’