ETV Bharat / state

"ரூ.82 கோடி மதிப்பீட்டில் சிறு தானிய இயக்கம்" - வேளாண் பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் வரும் ஐந்தாண்டுகளில் 82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறு தானிய இயக்கம் செயல்படுத்தப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கம் மூலம் தரிசு நிலங்கள் சீர்திருத்தம், மாற்றுப்பயிர் சாகுபடி மூலமாக 50,000 ஏக்கரில் சிறுதானிய சாகுபடி மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடி
கோடி
author img

By

Published : Mar 21, 2023, 1:18 PM IST

சென்னை: 2023-24ஆம் ஆண்டிற்கான தமிழக வேளாண் பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று(மார்ச்.21) தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் மூன்றாவது முறையாக வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் போல பச்சை நிற துண்டு அணிந்து வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர். கே பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் தனது பட்ஜெட் உரையில் பின்வரும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

* வரும் நிதி ஆண்டில் 2,504 கிராம ஊராட்சிகளில் 230 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும்.

* 10 ஏக்கர் தரிசாக உள்ள பகுதிகளை கண்டறிந்து ஆழ்துளை கிணறு அமைத்து மின் இணைப்பு தரப்படும். மின் இணைப்பு கிடைத்தவுடன் மா, கொய்யா, நெல்லி போன்ற பல்லாண்டு பலன் தரக்கூடிய மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு, அதில் மானியத்தில் சொட்டுநீர் பாசன வசதியும் வழங்கப்படும்.

* ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் தென்னை கன்றுகள் இல்லாத 300 குடும்பங்களுக்கு தலா இரண்டு தென்னங்கன்றுகள் விதம் இலவசமாக 2,504 கிராம பஞ்சாயத்துகளில் வழங்கப்படும்.

* விவசாயிகளின் வயல்களில் 600 பண்ணைக் குட்டைகள் அமைத்து கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர வழி வகை செய்யப்படும்.

* 300 ஆதிதிராவிடர் பழங்குடியின விவசாயிகளின் வயல்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, அதில் மின் இணைப்பு அல்லது சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்பு செட்டுகளும் இலவசமாக நிறுவப்பட்டு அதில் சொட்டு நீர் பாசன வசதியும் மானியத்தில் அமைத்து தரப்படும்.

தமிழ்நாடு சிறு தானிய இயக்கம்

* கடந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் 20 மாவட்டங்களில் உள்ளடக்கி அறிவிக்கப்பட்ட இரண்டு சிறு தானிய மண்டலங்களுடன், நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்கள் புதிதாக சேர்த்துக் கொள்ளப்படும்.

* சிறு தானிய பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் நீலகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள குடும்பத்தார்களுக்கு இரண்டு கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கச் செய்திட, சென்னை, கோயம்புத்தூர் மாநகர அமுதம், சிந்தாமணி, காமதேனு கூட்டுறவு விற்பனை அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

* 2023 ஆம் ஆண்டில் சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடுகளின் பொது சபை அறிவித்திருப்பதை ஒட்டி தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த இயக்கத்தில் தரிசு நிலங்களை சீர்திருத்தம் செய்தும், மாற்றுப்பயிர் சாகுபடி மூலமாகவும் 50,000 ஏக்கரில் சிறுதானிய சாகுபடி மேற்கொள்ளவும், சிறுதானிய விவசாயிகளை ஒன்றிணைத்து 100 சிறுதானிய உற்பத்திக் குழுக்களை உருவாக்கி பயிற்சி அளிக்கப்படும். சிறுதானிய பதப்படுத்தும் மையங்கள் அமைக்க உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானியம் வழங்கப்படும். வரும் ஆண்டில் மத்திய மாநில அரசு நிதியுடன் 82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த சிறு தானிய இயக்கம் செயல்படுத்தப்படவுள்ளது.

மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம்

* கிராம வேளாண் முன்னேற்ற குழுவில், கிராம ஊராட்சியில் உள்ள அனைத்து குக்கிராமங்களில் உள்ள அனைத்து பிரிவுகளையும் சார்ந்த 25 முதல் 50 விவசாயிகள் உறுப்பினராக இருப்பார்கள்.

* வரும் ஆண்டில் முதல் கட்டமாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் 2,504 கிராம ஊராட்சிகளில் வேளாண் முன்னேற்ற குழுக்கள், இரண்டு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு செயல்படுத்துவதற்கு பயிற்சிகள் அளிக்கப்படும்.

* இந்த ஆண்டும் அரசு விதை பண்ணைகளில் 200 ஏக்கர் பரப்பளவில் விதை உற்பத்தி செய்யப்பட்டு மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும். இதற்காக 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* அகில இந்திய அளவிலான பாரம்பரிய நெல் விதைகளை இனத்தூய்மையுடன் விதை வங்கியில் பராமரித்து வரும் விவசாயிகளை ஊகிவிக்கும் விதமாக பத்து விவசாயிகளுக்கு வரும் ஆண்டில் தலா மூன்று லட்சம் ரூபாய் வீதம் 30 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

* வரும் நிதியாண்டி முதல் கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, துவரை, உளுந்து, பச்சைப்பயிறு நிலக்கடலை, கரும்பு போன்ற பயிர்களை சாகுபடி செய்து மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசாயிகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்.

* உணவு தானிய பயிர்கள் உற்பத்தி, உற்பத்தி திறனில் சிறந்து விளங்கும் களப்பணியாளர்கள், வட்டார அலுவலர்கள், மாவட்ட அலுவலர்களை ஊக்குப்படுத்தும் விதமாக வரும் ஆண்டு முதல் விருதுகள் வழங்கப்படும்.

* குறுவை பருவத்தில் குறைந்த நீர் தேவை உள்ள சிறு தானியங்கள் பயிறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றின் சாகுபடியை ஊக்குவிக்க வரும் நிதியாண்டில் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் மாற்று பயிர் சாகுபடியாக 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* ஆறு லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல்லுக்கு பின் மாற்றுப்பயிர் சாகுபடி மேற்கொள்ள உதவி அளிப்பதற்காக வரும் ஆண்டில் 24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* வரும் நிதி ஆண்டில் வேளாண்மை தோட்டக்கலை பட்டப்படிப்பு படித்த 200 இளைஞர்களுக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்காக இரண்டு லட்சம் ரூபாய் வீதம் நிதிஉதவி வழங்கிட நான்கு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வரும் ஆண்டில் 15 கோடி நிதி ஒதுக்கீட்டில் 60 ஆயிரம் வேளாண் கருவிகள் தொகுப்புகள் விநியோகம் செய்யப்படும். குறிப்பாக நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் 30,000 தொகுப்புகள் வழங்கப்படும்.

அங்கக வேளாண்மை

* அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 32 மாவட்டங்களில் 14,500 எக்டர் பரப்பளவில் 725 தொகுப்புகள் உருவாக்கப்படும், விவசாயிகள் அங்கங்க சான்றிதழ் பெறுவதை ஊக்குவிக்க சான்று கட்டணத்திற்கு பத்தாயிரம் எக்டருக்கு மானிய உதவி அளிக்கப்படும். வரும் ஆண்டில் இதற்கென 26 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

* நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண்மையை பெருமளவில் ஊக்குவிப்பதற்கான சிறப்பு திட்டம், ஐந்து ஆண்டுகளில் 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.

* நஞ்சில்லா உணவு விளைவிக்கும் அங்கங்க விவசாயிகளுக்கு அவர்களது விலை பொருட்களில் நச்சு பொருள்களின் தன்மைகளை அறிந்து அதன் தரத்தை உறுதி செய்யும் வகையில் நச்சு மதிப்பீட்டு பரிசோதனை செய்வதற்கான 50 சதவீத மானியம் வழங்கும் பொருட்டு வரும் ஆண்டில் 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

* அங்கக விவசாயிகளுக்கு கைகொடுக்கும் விவசாயிகளுக்கு 'தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும்'. இவ்விருது 5 லட்சம் ரூபாய் பணப்பரிசு பாராட்டு பத்திரத்துடன் குடியரசு தினத்தன்று வழங்கப்படும்.

* வரும் ஆண்டில் 75 லட்சம், செம்மரம், சந்தனம், தேக்கு, ஈட்டி போன்ற உயர் மதிப்புள்ள மரக்கன்றுகள் முழு மானியத்தில் வழங்கப்பட உள்ளன. இதற்கென ஒன்றிய மாநில அரசு நிதியிலிருந்து 15 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

* ஆதிதிராவிட பழங்குடியின சிறு குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம், பதினொரு கோடி ரூபாய் மாநில நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்படும்.

இதையும் படிங்க: ரேஷன் கடைகளில் கேழ்வரகு, கம்பு உள்ளிட்ட சிறுதானியங்கள் - வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.