ETV Bharat / state

'நீங்கள் எல்லாம் என்ன கேள்வி கேட்கிறீர்கள்..?' - செய்தியாளர்களிடம் கடுகடுத்த தம்பிதுரை - Thambidurai

சென்னை: வாரணாசி கூட்டத்திற்கு அவர்கள் கூப்பிட்டார்களா.. நீங்களாக சென்றீர்களா? என்று கேள்வி எழுப்பியபோது, "நீங்கள் எல்லாம் என்ன கேள்வி கேட்கிறீர்கள்" என்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை கடுகடுத்தார்.

சென்னை விமான நிலையத்தில் தம்பிதுரை
author img

By

Published : Apr 27, 2019, 9:42 AM IST

மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நரேந்திர மோடிக்கு இணையான தலைமை இந்தியாவில் இல்லை என்கிற நிலைமை உருவாகியுள்ளது. உலக தலைவர்களில் ஒருவராக அவர் உருவாகியுள்ளார். வாரணாசியில் நடந்த மோடி ஊர்வலம் மற்றும் வேட்புமனுத் தாக்கலில் மக்களின் ஆர்வத்தை பாக்கும்போது மீண்டும் அவர் பிரதமராக வருவார் என்பது தெளிவாக தெரிகிறது, என்றார்.

ஜெயலலிதாவைவிட வேறு சிறந்த தலைமை இல்லை என்பதுதான் அதிமுகவின் திடமான நம்பிக்கை. இப்போது எப்படி மோடி சிறந்த தலைவர் என்கிறீர்கள் என்று செய்தியாளர்களின் கேள்விக்கு, "எங்களுடைய தலைமை வேறு.. நான் கூறுவது இன்றைக்கு இருக்கின்ற நிலைமையை சொல்கிறேன். உலகளவில் மதிக்கக்கூடிய தலைவராக மோடி இருக்கின்றார். இந்தியாவின் பாதுகாப்பிற்கும் பல்வேறு திட்டங்களையும் அவர் செயல்படுத்திவருகிறார். மக்கள் அவரைவிட்டால் வேறொரு பிரதமர் இல்லை என்ற நிலைமை உருவாகியுள்ளது. மக்கள் அவரை விரும்புகிறார்கள்", என்றார்.

தம்பிதுரை

வாரணாசி கூட்டத்திற்கு அவர்கள் கூப்பிட்டார்களா.. நீங்களாக சென்றீர்களா? என்று கேள்வி எழுப்பியபோது, "நீங்கள் எல்லாம் என்ன கேள்வி கேட்கிறீர்கள்" என்று கடுகடுத்தார் தம்பிதுரை. அதைத் தொடர்ந்து, ராணுவ கட்டுப்போட்டோடு இருப்பது அதிமுக என்று கட்சியினர் கூறும் சூழலில் இதுவரையில் இல்லாத மரபுகளை மீறி சென்றுள்ளீர்களே என்ற கேள்விக்கு, "கூட்டணி அடிப்படையில் அனைவருக்கும் அழைப்பு வந்ததால், நாங்கள் சென்றோம். எங்கள் ஒற்றுமையை காட்டுவதற்கும், நாங்கள் கூட்டணியில் உறுதியாக உள்ளோம் என்பதை காடுவதற்கும், மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்பதற்காகவும் நாங்கள் பங்கேற்றோம்" என்றார்.

தமிழகத்தில் இருக்கின்ற பாஜக தலைவர்கள் கலந்து கொள்ளாதநிலையில், கூட்டணி கட்சியான அதிமுக தலைவர்கள் கலந்துகொள்வது அதிமுகவின் பலவீனத்தை காட்டுகிறதா என்ற கேள்விக்கு, "நாங்கள் வலிமையாகத்தான் இருக்கிறோம். நாங்கள் வலிமையாக இருக்கின்ற காரணத்தினால்தான், எங்கள் கூட்டணி அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெறும் நிலைமையில் இருக்கிறது", என்று பதிலளித்தார்.

Intro:தம்பித்துரை சென்னை விமானநிலையத்தில் பேட்டி

Body:தம்பித்துரை சென்னை விமானநிலையத்தில் பேட்டி

நரேந்திர மோடிக்கு இனையான தலமை இந்தியாவில் இல்லை என்ற நிலமை உருவாகியுள்ளது உலக தலைவர்களில் ஒருவராக அவர் உருகியுள்ளார்

வாரணாசியில் நேற்று நடந்த ஊர்வலம் மற்றும் இன்று நடந்த வேட்ப்புமனு தாக்கல் செய்யும்போது இருக்கும் ஆர்வத்தை பாக்கும்போது மீண்டும் அவர் பிரதமராக வருவார் என்பது தெளிவாக தெரிகிறது

ஜெயலலித்தாவை விட வேறு சிறந்த தலமை இல்லை என்று தான் அதிமுக வின் திடமான நம்பிக்கை இப்போது எப்படி மோடி சிறந்த தலைவர் என்கிறீர்கள் என செய்தியாள்ர்கள் கேள்வி கேட்டதற்கு

எங்களுடைய தலைமை வேறு நான் கூறுவது இன்றைக்கு இருக்கின்ற நிலைமை என்றார் உலகளவில் மதிக்க கூடிய தலைவராக மோடி இருக்கின்றார் இந்தியாவின் பாதுக்கப்பிற்க்கும் பல்வேறு திட்டங்களையும் அவர் செயல்படுத்தி வருகிறார் மக்கள் அவரை விட்டால் வேறுவோரு பிரதமர் இல்லை என்று அத்தகைய நிலைமை அவர்க்கு உருவாகியுள்ளது மக்கள் அவரை விரும்புகிறார்கள்

நாங்கள் அமைத்த கூட்டனி அடிப்படையில் அனைவருக்கும் அழைப்பு வந்ததால் நாங்கள் சென்றோம் எங்கள் ஒற்றுமையை கான்பிப்பதற்கும் நாங்கள் கூட்டணியில் உறுதியாக உள்ளோம் என்றும் மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்பதற்காகவும் நாங்கள் பங்கேற்றும் என்றார்

தமிழகத்தில் இருகின்ற பாஜக தலைவர்கள் கலந்துகொள்ளாத நிலையில் கூட்டணி கட்சியான அதிமுக தலைவர்கள் கலந்துகொள்வது அதிமுக வின் பலவினத்தை காட்டிகிறதா என கேட்க்கப்பட்ட கேள்விக்கு

நாங்கம் வலிமையாகதான் இருக்கிறோம் நாங்கள் வலிமையாக இருக்கின்ற காரணத்தினால்தான் எங்கள் கூட்டனி வலிமையாக அமைந்து 40 தொகுதியிலும் வெற்றி பெறும் நிலைமையில் இருக்கிறோம் என்றார்

Conclusion:இவ்வாறு சென்னை விமானநிலையத்தில் தம்பித்துரை செய்தியாள்ர்களுக்கு கூறினார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.