டெல்லி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், திருச்சி எம்.பி.யுமான திருநாவுக்கரசர், ' சீமானுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் என்ன தொடர்பு உள்ளது?. வரலாற்றில் கறை படிந்த நாளை பெருமைக்குரிய நாளாக சீமான் வர்ணிப்பது கடுமையான கண்டனத்துக்குரியது' என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், 'பல கோடி இந்திய மக்களை காயப்படுத்தும் வகையில் சீமான் பேசி வருகிறார். 4 பேர் கைதட்ட வேண்டும் என்பதற்காக அருவருக்கத்தக்க வகையில் பேசியதற்காக சீமான் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
தேர்தல் நேரத்தில் சிலரின் அபிமானத்தைப் பெறுவதற்காக நாட்டுக்கு விரோதமாக பேசிய சீமான் மீது, மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாஜக பிரமுகருக்கு ஆதரவு தெரிவித்த சீமான்!