ETV Bharat / state

தடுப்பூசி செலுத்துவதைத் துரிதப்படுத்த வேண்டிய நேரம் இது - கரோனா தடுப்பூசி

எல்லோருக்கும் தடுப்பு மருந்து செலுத்தப்படுவதை இன்னும் துரிதப்படுத்த வேண்டுமென்றால், அதற்கு விரிவான மருந்து உற்பத்தி தொடர வேண்டும்; விரிவான அளவில் தடுப்பு மருந்து செலுத்தப்பட வேண்டும். அரசுகள் ஒன்றிணைந்து அர்த்தத்துடன் செயல்பட்டால் மட்டுமே தேசம் கோவிட்-19 என்னும் அரக்கனை வீழ்த்தி வெற்றி காண முடியும்.

கரோனா தடுப்பூசி
கரோனா தடுப்பூசி
author img

By

Published : Apr 10, 2021, 6:10 AM IST

இரண்டாவது அலையாக பாய்ந்து வந்திருக்கும் கரோனா பெருந்தொற்றின் வீரியத்தினால், ஒரே நாளில் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை,1.25 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. அதனால் மத்திய அரசு தொற்றை பலமாகக் கட்டுப்படுத்தும் ஓர் திட்டத்தை உருவாக்கி மேற்கொள்ளப்போவதாக உத்தரவாதம் அளித்திருக்கிறது.

முறையான பரிசோதனை மூலம், சிகிச்சை முறைகள் மூலம், கோவிட்-19 விதிமுறைகளை தீவிரமாக கடைபிடிப்பதன் மூலம், தடுப்பு மருந்து செலுத்துவதை விரிவாக்கம் செய்வதின் மூலம் அச்சுறுத்தும் இந்த இரண்டாவது கட்ட கரோனாத் தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஏப்ரல் 11 முதல் 14வரை ’டீக்கா உத்சவ்’ நடத்த வேண்டும் என்று மத்திய அரசு அழைப்பு விடுத்திருக்கிறது. இந்த உத்சவ், நூறு பேருக்கு மேல் பணி செய்யும் எல்லா அரசு, தனியார் அலுவலகங்களிலும் தடுப்பூசி செலுத்துவதை முன்னெடுத்துச் செல்ல விழைகிறது.

நாற்பது லட்சம் டோஸ் தடுப்பு மருந்து கொடுக்கும் அளவுக்கு தேசத்தின் கட்டமைப்பு முன்னேறி இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனாலும் தடுப்பூசித் திட்டத்தை விரிவாக்கம் செய்வது என்பது மிகப்பெரும் சவாலாகத்தான் இருக்கும்.

அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று தடுப்பூசி போடுவதற்குத் தேவையான பணியாட்கள் வேண்டும்; அதே சமயம் அதிகமான மருந்து டோஸ்கள் கிடைக்கும்படியும் செய்தாக வேண்டும். ஏற்கனவே தடுப்பு மருந்துப் பற்றாக்குறை அரசியல் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.

தொற்றுநோய்க்கு ஆளான மனிதர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு முயற்சி செய்யாமல் விட்ட தனது தோல்வியை மறைக்கும் நோக்கோடு மஹாராஷ்டிரா அரசு மருந்துப் பற்றாக்குறைப் பிரச்னையை எழுப்பி அதை அரசியலாக்குகிறது என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் குற்றஞ்சாட்டி இருக்கிறார். சிவசேனா-காங்கிரஸ்-தேசிய காங்கிரஸ் கட்சிக் கூட்டணி ஆட்சி செய்யும் மஹாராஷ்ட்டிராவைத் தவிர்த்து, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ஒடிஷா, கேரளா, கர்நாடகம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் அரசுகளும் தடுப்பு மருந்துப் பற்றாக்குறைப் பற்றி புகார் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

தடுப்பு மருந்து உற்பத்தியாளர்களின் உற்பத்தித் திறன் பற்றிய உண்மைகளை, அவர்களின் தற்போதைய உற்பத்தி பற்றிய உண்மைகளை, அவர்கள் உற்பத்தி செய்து கொண்டிருக்கும் அளவைப் பற்றிய உண்மைகளை எவரும் திரித்துக் கூற முடியாது. ஒட்டுமொத்த தேசமே நிமிர்ந்து நின்று நெஞ்சுரத்துடன் உலகளாவிய கரோனா தொற்றை எதிர்த்துப் போராட வேண்டிய சோதனையான இந்தக் காலக்கட்டத்தில் இப்படி ஒருவரை ஒருவர் குறைசொல்லும், பழி சொல்லும் அரசியல் விளையாட்டை பகுத்தறிவுச் சிந்தனையுள்ள எவரும் ரசிக்க மாட்டார்கள்.

நாட்டில் கோவிட் தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஜனவரி 16 அன்று தொடங்கியது. மொத்தம் 30 கோடி மக்களுக்கு தடுப்பூசி மருந்து கொடுக்கப்பட வேண்டும் என்பது இந்தத் திட்டத்தின் நோக்கம். முன்களப் பணியாளர்களுக்கும், முதுமையாலும், இணைநோய்கள் தாக்குதலாலும், தொற்றுக்கு ஆளாகக்கூடிய சாத்தியம் அதிகம் கொண்ட மக்களுக்கும் தடுப்பு மருந்து கொடுப்பதில் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை இலக்காக விதிக்கப்பட்டிருந்த மக்களில் மூன்றில் ஒருபகுதியினர் கூட தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளவில்லை. இந்த வேளையில் மருந்துப் பற்றாக்குறை பிரச்சினை வேறு எழுந்திருக்கிறது என்பது கவலைக்குரிய விசயம்தான்.

சீரம் இன்ஸ்டிடியூட் 47 கோடி டோஸ்களையும், பாரத் பயோடெக் நிறுவனம் 12 கோடி டோஸ்களையும் வரும் ஆகஸ்டு மாதத்திற்குள் உற்பத்தி செய்யும் என்று பதினைந்து நாட்களுக்கு முன்பு நிதி ஆயோக் உறுப்பினரான பேராசிரியர் வி.கே. பால் கூறியிருக்கிறார்.

தடுப்பு மருந்துக்கான கச்சாப் பொருட்களை இறக்குமதி செய்வதில் அமெரிக்காவின் பாதுகாப்புச் சட்டங்களால் தடைகள் உருவாகிவிட்டன என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா மத்திய அரசிடம் ஒரு மாதத்திற்கு முன்பு சுட்டிக்காட்டியிருக்கிறது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவும், பாரத் பயோடெக் நிறுவனமும் தடுப்பு மருந்து உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டி மத்திய அரசிடம் அவசரகால நிதி உதவி கேட்டிருக்கின்றன.

இரண்டு தடுப்பு மருந்துகளை இந்தியாவே உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது என்பது ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டிய விசயம் என்று ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடி சொல்லி இருக்கிறார். தடுப்பு மருந்திற்கான கச்சாப் பொருள்களைப் பெறுவதற்காகவும், மற்றும் நிதி உதவிக்காகவும் இந்த இரண்டு நிறுவனங்களும் விடுத்திருக்கிற வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அவர் தாராளமாக எதிர்வினை ஆற்ற வேண்டும்.

பதினெட்டு வயதைத் தாண்டிய ஒவ்வொரு அமெரிக்கக் குடிமகனுக்கும் ஏப்ரல் 19-ஆம் தேதியிலிருந்து தடுப்பூசி செலுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்திருக்கிறார். இந்தியாவில் வயதுவந்த ஒவ்வொருவரும் தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் சேம்பர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி கருத்து கூறியிருக்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.