தமிழ்நாடு அரசு சட்டக் கல்லூரிகளில் சட்டப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்குவதற்கும் சமர்ப்பிப்பதற்கும் வரும் டிசம்பர் 5ஆம் தேதிவரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அரசு சட்டக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் மூன்றாண்டு எல்எல்பி சட்டப் படிப்பிற்கும், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் மூன்றாண்டு சட்டப் படிப்பு மற்றும் இரண்டாண்டு முதுகலை சட்ட மேற்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்குவதற்கும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கும் 5.12.20 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.