சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பருவமழை வழக்கத்தை விட அதிகம் பெய்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் மிக மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது.
எனவே இந்த 4 மாவட்டங்களிலும், முதலமைச்சரின் உத்தரவின் பேரில் பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்த 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மின் கட்டணம் செலுத்த கடைசி நாள் நவம்பர் 30 ஆம் தேதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கனமழை எச்சரிக்கை...பொதுமக்கள் பயணம் செய்ய வேண்டாம்...