கரோனா தொற்று காரணமாக 22.03.2020 முதல் 30.06.2020 வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான பணத்தைத் திரும்ப வழங்குவதற்காக, சென்னை கோட்டத்தில் நாளை (05.06.2020) முதல் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில், டிக்கெட் முன் பதிவு மையங்களைத் திறக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.
அதன்படி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், சென்னை எழும்பூர், சென்னை கடற்கரை, திருமயிலை, மாம்பலம், பரங்கிமலை, தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், பெரம்பூர், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, வாலாஜா சாலை, ஆம்பூர், குடியாத்தம், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை ஆகிய ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் முன் பதிவு மையங்கள் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மையங்கள் காலை 10 முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்றும்; 22.03.2020 முதல் 180 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்ட அனைத்து ரயில்களுக்கும் 100 விழுக்காடு டிக்கெட் கட்டணம் திரும்ப செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓரே நேரத்தில் பயணிகள் டிக்கெட் முன் பதிவு நிலையத்துக்கு வருவதைத் தவிர்க்கும் விதமாக, குறிப்பிட்ட நேரத்தில் டிக்கெட் கட்டணத்தை திரும்பப் பெறலாம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
01.04.2020 முதல் 14.04.2020 வரையிலான டிக்கெட்களுக்கு 12.06.2020 வரை பணத்தை திரும்ப பெறலாம்.
15.04.2020 முதல் 30.04.2020 வரையிலான டிக்கெட்களுக்கு 19.06.2020 வரையும்,
01.05.2020 முதல் 15.05.2020 வரையிலான டிக்கெட்களுக்கு 26.06.2020 வரையும்,
16.05.2020 முதல் 31.05.2020 வரையிலான டிக்கெட்களுக்கு 03.07.2020 தேதி வரையும்
01.06.2020 முதல் 30.06.2020 வரையிலான டிக்கெட்களுக்கு 10.07.2020 வரையும் பணத்தைத் திரும்ப பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணத்தை திரும்பப் பெற வரும் பயணிகள், முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.