சென்னை: வித்தியாசம் ததும்பும் நடிகர் கமல் ஹாசன் இயக்கி நடித்த படம் விஸ்வரூபம், இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகின. முதல் பாகத்தில் ஆக்ஷன், திரில்லர், நடனம் என கலக்கல் காம்போவாக 2013ஆம் ஆண்டில் வெளிவந்தது. அமெரிக்காவில் வசிக்கும் விஷ் என்னும் விஷாம் அகமது கஷ்மீரி, அங்குள்ள நியூயார்க் நகரில் நடக்கவிருந்த வெடிகுண்டு தாக்குதலைத் தடுக்கிறார். அப்போது வில்லன் ஒமர் தப்பித்துவிடுகிறார்.
அங்கிருந்து தொடங்குவதுபோல கதைக் களத்தைக் கொண்டு விஸ்வரூபம் இரண்டாம் பாகம் 2018ஆம் ஆண்டு வெளியானது. அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பும் வாசிம் (கமல்), முதல் பாகத்தில் தப்பிய வில்லன் ஒமர் (ராகுல் போஸ்), இரண்டாம் பாகத்தில் இந்தியாவில் இரண்டு குண்டுவெடிப்புத் தாக்குதலை நடத்த முயற்சிக்கிறார். அதனைத் தடுத்து வில்லனை வாசிம் (கமல்) கொல்கிறார்.
முதல் பாகத்திற்கு இருந்த வரவேற்பும், கதைக்களத்தில் இருந்த விறுவிறுப்பும் இரண்டாம் பாகம் விஸ்வரூபத்தில் இல்லை என்றாலும் விஸ்வரூபம் நடிகர் கமல் ஹாசனின் திரை வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு மைல்கல். எதிலும் வித்தியாசத்தைக் காட்டும் கமல், இப்படத்தில் சற்று தூக்கலாகவே காண்பித்திருப்பார்.
நடிகர் கமல் ஹாசன் நடித்து, இயக்கிய படங்களில் இப்படம் இருவருக்கு தனிப் பெயரைப் பெற்றுத்தந்தது என்று கூறினால் அது மிகையல்ல. விஸ்வரூபம் இரண்டாம் பாகம் வெளியாகி இன்றுடன் மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இதனையொட்டி #3yearsofVishwaroopam2 என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகிவருகிறது. தற்போதும்கூட இது பேசப்படும் படமாக இருப்பது நடிகர் கமல் ஹானுக்கு மேலும் ஒரு மணிமகுடம்.
இதையும் படிங்க: அதிக விலைக்கு விற்பனையான விக்ரம் இந்தி டப்பிங்?