ETV Bharat / state

ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் திருப்பம்... ஸ்கெட்ச் போட்டது அரசியல் பிரமுகரா? வெளியான அதிர்ச்சி தகவல்! - கைது

ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேர் சரண் அடைந்துள்ளதாகவும், ஸ்கெட்ச் போட்டு கொடுத்தது அரசியல் கட்சி பிரமுகர்கள் எனவும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

Rowdy murder
ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை
author img

By

Published : Aug 20, 2023, 11:22 AM IST

சென்னை: பட்டினம்பாக்கம் லூப் சாலையில் பிரபல ரவுடியான புளியந்தோப்பை சேர்ந்த ஆற்காடு சுரேஷை கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி காரில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று கொலை செய்து விட்டு தப்பி விட்டனர். பொதுமக்கள் அதிகமாக கூடக்கூடிய கடற்கரை பகுதியில் வைத்து ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டது அந்த பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகள் யார்? எதற்காக கொலை நடந்தது?.. முன்விரோதம் காரணமா?.. என்ற பல கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே ஆகஸ்டு 19 ஆம் தேதி கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சந்துரு என்ற சைதாப்பேட்டை சந்துரு, எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த யமஹா மணி மற்றும் ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஜெயபால் ஆகியோர் என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, முன்விரோதம் காரணமாக ஆற்காடு சுரேஷ் கொலை நடந்து இருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் கொலை நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அதில் சொகுசு கார் ஒன்றில் 6 பேர் கொண்ட கும்பல் வந்து செல்வதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். கார் நம்பர் பிளேட்டை வைத்து கார் யாருடையது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும் காவல் நிலையத்தில் சரண் அடைந்த 3 பேரையும் பட்டினப்பாக்கம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இக்கொலை வழக்கின் பின்னணி குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, பிரபல அரசியல் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவருக்கும், ஆற்காடு சுரேஷுக்கும் கட்டப்பஞ்சாயத்து செய்வதில் முன்பகை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் முக்கிய பொறுப்பில் உள்ள அந்த நபரை ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை செய்ய திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.

அவருக்கு வலதுகரமாக செயல்பட்டு வந்த ரவுடி ஒருவருக்கு தகவல் தெரிய வந்த நிலையில், திருவள்ளூரைச் சேர்ந்த ரவுடி சந்துருவிற்கு ஆற்காடு சுரேஷை கொலை செய்ய அசைன்மெண்ட் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை மையமாக வைத்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டு சந்துருவிற்கும், ஆற்காடு சுரேஷிற்கும் மாமூல் வசூலிப்பதில் ஏற்பட்ட தகராறில் வெட்டிக்கொண்டதும், இதனால் இருவருக்கும் பகை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து இந்த அசைன்ட்மெண்டில் சந்துருவின் நண்பரான ஆற்காட்டை சேர்ந்த ரவுடி ஜெயபாலுடன் சந்துரு கூட்டு சேர்ந்துள்ளார். ஆற்காட்டில் ரவுடி ஜெயபாலுக்கும், சுரேஷிற்கும் யார் தாதா என்ற போட்டி நிலவி வந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் சந்துரு, ஜெயபால் தங்களது பகையை தீர்த்துக்கொள்ள நல்ல சந்தர்ப்பமாக கருதி ஆற்காடு சுரேஷை கொலை செய்ய திட்டமிட்டு காத்திருந்த நிலையில், எழும்பூர் நீதிமன்றத்திற்கு ஆற்காடு சுரேஷ் வருவது தெரிய வந்துள்ளது.

ஆஜராகிய பின்னர் ஆற்காடு சுரேஷ் அவரது காரில் செல்லும் இடத்தை கார் மூலமாக கொலையாளிகள் பின் தொடர்ந்து வந்து பட்டினம்பாக்கத்தில் வைத்து ரவுடி ஆற்காடு சுரேஷை கொலை செய்துவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. தற்போது இதனை மையமாக வைத்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆற்காடு சுரேஷை கொலை செய்வதற்கான ஸ்கெட்சை போட்டு கொடுத்தது பிரபல அரசியல் கட்சியைச் சேர்ந்த 2 பேர் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன.

அதனையும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டினப்பாக்கம் போலீசார் தலைமறைவாக உள்ள பரத், அருண், சேட்டு உள்பட பலரை தீவிரமாக தேடி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் அனைவரையும் கைது செய்த பின்னரே ஆற்காடு சுரேஷின் கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கள்ள நோட்டுகள் அச்சடித்த கும்பல் - சென்னையில் மேலும் ஒருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.