கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தற்காலிமாக ரத்துசெய்யப்பட்டிருந்த ரயில் சேவையை செப்டம்பர் 7ஆம் தேதியிலிருந்து தொடங்க, தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து, சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களிலிருந்து தென் மாவட்டங்கள், தென் மாநிலங்களுக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன.
இந்த நிலையில், அகமதாபாத், ஷாலிமார், திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்கு மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தபடி, முழுமையான முன்பதிவு செய்யப்பட்ட சிறப்பு ரயில்களின் விவரங்கள் பின்வருமாறு: -
ரயில் எண்: 02656 / 02655 சென்னை - அகமதாபாத் - சென்னை முழுமையாக முன்பதிவு செய்யப்பட்ட தினசரி சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில்
ரயில் எண்: 02659 / 02660 ஷாலிமார் - நாகர்கோயில் - ஷாலிமார்; முழுமையாக முன்பதிவு செய்யப்பட்ட வாராந்திர சிறப்பு ரயில்
ரயில் எண்: 02641 / 02642 திருவனந்தபுரம் - ஷாலிமார் - திருவனந்தபுரம் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்ட இரு - வாராந்திர சிறப்பு ரயில் உள்ளிட்ட மூன்று சிறப்பு ரயில்கள் சேவைக்கு வர உள்ளன
மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (நவம்பர் 18) 08.00 மணி முதல் தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.