ETV Bharat / state

ஒரே நாளில் மூன்று காவலர்களுக்கு கரோனா தொற்று! - tamilnadu corona news

சென்னை: மூன்று ஆயுதப்படை காவலர்களுக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Corona update  three more police get corona positive in chennai  corona update news  tamilnadu corona news
மூன்று ஆயுதப்படை காவலர்களுக்கு கரோனா தொற்று
author img

By

Published : May 7, 2020, 11:15 AM IST

சென்னை புதுப்பேட்டையில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்துவரும் காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியாகியுள்ளது. இவர், தற்போது ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். ஏற்கனவே புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் தங்கியிருக்கும் காவலருக்கு கரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது.

அதே குடியிருப்பில் தங்கியிருக்கும் 46 வயதான காவலர் ஒருவர் ஆயுதப்படை காய்கறி அங்காடியை கவனித்து வந்துள்ளார். இதனால், கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு அவர் அடிக்கடி சென்று வந்ததாகத் தெரிகிறது. கோயம்பேடு காய்கறிச் சந்தை கரோனா தொற்று பாதிப்பைத் தொடர்ந்து, இவர் கடந்த மூன்றாம் தேதி ஓமந்தூரார் மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.

அங்கு அவருக்கு நேற்று கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதேபோல், புதுப்பேட்டை நரியங்காடு காவலர் குடியிருப்பில் வசித்து வரும் 44 வயது பெண் காவலர் ஒருவருக்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க: காவல் துறையினருக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்த மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.