சென்னை: கிண்டி நாகிரெட்டி தெருவில் வசித்துவரும் சினேகா என்பவர் குழந்தைகள் நலக்குழு அலுவலர்களிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், "சரவணன்-சத்யா தம்பதிக்கு மூன்று மாத குழந்தை உள்ளது. சரவணன் மதுப்போதைக்கு அடிமையாகி உள்ளார். சத்யா மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவர்களது மூன்று மாத குழந்தை நீண்ட நேரம் பசியால் அழுது கொண்டே உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து கிண்டி காவல் துறையினர், குழந்தைகள் நலக்குழு அலுவலர்கள் ஆகியோர் தம்பதி வீட்டிற்கு சென்று குப்பைகளுக்கு நடுவே இருந்த குழந்தையை மீட்டனர்.
பின்னர் தேனாம்பேட்டை பால மந்திர் காமராஜர் டிரஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. தற்போது எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அயனாவரத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் குழந்தையின் தாய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளி ஊழியர்கள் போராட்டம்