ETV Bharat / state

ஓடும் காரில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்: மடக்கி நிறுத்திய காவலர் - ஒருவர் கைது, இருவருக்கு வலைவீச்சு! - கிரைம் செய்திகள்

ஓடும் காரில் இளம்பெண்ணிடம் மூன்று இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஒருவர் கைதுசெய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள இருவரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

பாலியல் அத்துமீறல்
பாலியல் அத்துமீறல்
author img

By

Published : Nov 25, 2021, 11:53 AM IST

சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள சாலையில் இன்று (நவம்பர் 25) அதிகாலை 3 மணியளவில் அதிவேகமாகச் சென்ற காரில் பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அந்தச் சாலையில் இலங்கைத் தூதரகம் அமைந்திருப்பதால் அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த, காவலர் தேவசகாயம் காரை மடக்கி நிறுத்தியுள்ளார்.

பின்னர் காரை சோதனை செய்தபோது, காரிலிருந்த இளம்பெண் கூச்சலிட்டுக் கொண்டே தனது காலணியை எடுத்து உடனிருந்த இளைஞர்களை ஆவேசமாகத் தாக்கியுள்ளார். உடனே காவலர் தேவசகாயம் இச்சம்பவம் தொடர்பாக நுங்கம்பாக்கம் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தார்.

அப்போது காரிலிருந்த தீபக், சக்தி ஆகியோர் தப்பிக்க, கார் ஓட்டிவந்த கவுதமன் மட்டும் காவல் துறையினரிடம் சிக்கிக்கொண்டார். முதற்கட்ட விசாரணையில், "காரிலிருந்த இளம் பெண் தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டே நட்சத்திர விடுதியில் பகுதி நேரமாக நடனமாடிவருகிறார்.

அவர் அதே விடுதியில் பகுதி நேரமாக நடனாமாடிக்கொண்டே மூன்று ஐடி நிறுவன ஊழியர்களுடன் பழகி மது குடித்துள்ளார். நான்கு பேரும் போதையில் இருந்த நிலையில் இளம் பெண் தங்கியிருக்கும் அறையில் கொண்டு சென்றுவிடுவதாகக் கூறி, இவர்கள் அப்பெண்ணை காரில் வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்" எனத் தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையில் கார் ஓட்டிவந்த கவுதமன் என்பவரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இருவரைத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் தலைமைக் காவலர் மீது வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.