வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்டச் சாலையின் இரு பகுதிகளின் நடுவே காலியிடம் உள்ளது. அந்த இடத்தில் செடிகள் நடும் பணி நடைபெற்றுவருகிறது. இதில் ஏராளமான பெண்கள் பள்ளம் தோண்டி செடியை நடும் பணியில் ஈடுபட்டுவந்தனர்.
அந்தவகையில் பூந்தமல்லி அடுத்த வயலா நல்லூரைச் சேர்ந்த பச்சையம்மாள் (45), செஞ்சி லட்சுமி (57), சுகந்தி (40) ஆகியோர் செடி நடும் பணியில் நேற்று (பிப். 2) ஈடுபட்டிருந்தனர். அப்போது பூந்தமல்லியிலிருந்து தாம்பரம் நோக்கி வேகமாக வந்த லாரி சாலையோரம் நின்றிருந்த சரக்கு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பச்சையம்மாள், செஞ்சி லட்சுமி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சுகந்தி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விபத்துக்கு காரணமாக லாரி ஓட்டுநரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் லாரி ஓட்டுநர் மதுபோதையில் வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, கைதுசெய்யப்பட்ட லாரி ஓட்டுநரை காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: திருவள்ளூரில் திமுக பிரமுகர் வெட்டி கொலை