ETV Bharat / state

செங்கல்பட்டில் மின்சார ரயில் மோதி 3 சிறுவர்கள் உயிரிழப்பு!

Chengalpattu train accident: செங்கல்பட்டு அடுத்த ஊரப்பாக்கம் அருகே மின்சார ரயில் மோதி 3 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது, சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharatபோலீசார் விசாரணை
Etv Bharatசெங்கல்பட்டில் மின்சார ரயில் மோது 3 சிறுவர்கள் உயிரிழப்பு.
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2023, 2:27 PM IST

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே தண்டவாளத்தை கடக்கும் பொழுது, தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த மின்சார ரயில் மோதி சம்பவ இடத்திலேயே மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார், உயிரிழந்த மூன்று சிறுவர்களின் உடல்களை மீட்டு அடையாளம் கண்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர்கள் மூன்று பேரும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் (15), அவருடைய சகோதரர் ரவி (15) மற்றும் மஞ்சுநாத் (11) என்பது தெரிய வந்துள்ளது. மேலும், அதில் இரண்டு பேர், சுரேஷ் (காது கேட்காதவர்), மஞ்சுநாத் (வாய் பேச முடியாதவர்) மாற்றுத் திறனாளி சிறுவர்கள் ஆவர்.

இதையும் படிங்க: கடலூரில் மூளைச் சாவு அடைந்த விவசாயியின் உடல் உறுப்பு தானம் - அரசு மரியாதையுடன் நடந்த தகனம்!

அதனைத் தொடர்ந்து, போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், விசாரணையில் பள்ளி விடுமுறை என்பதால், கர்நாடகாவில் இருந்து ஊரப்பாக்கத்தில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு வந்துள்ளனர்.

அவர்கள் 3 பேரும் ரயில்வே டிராக்கை வேடிக்கை பார்த்துக் கொண்டே கடக்கும்போது தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த மின்சார ரயில் மோதி மூன்று சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ரயில் வரும் சத்தம் அவர்களுக்கு கேட்காமல் இருந்தது, அவர்களின் உயிரிழப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.

விடுமுறைக்காக உறவினர் வீட்டுக்கு வந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இது குறித்து தாம்பரம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தேனி அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்.. மீட்கும் பணியில் தாமதம் என உறவினர்கள் குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.