சென்னை: வண்ணாரப்பேட்டையில் சிலர் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதி முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, சீனிவாசபுரத்தை சேர்ந்த சன்னு என்கிற அப்துல் அமித்(21), டிபிகே தெருவைச் சேர்ந்த அல்லா பகேஸ்(20), கொருக்குப்பேட்டை ரங்கநாதபுரத்தை சேர்ந்த அருண்(23), பாபு ஆகியோர் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அங்கு பதுங்கியிருந்த சன்னு, அல்லா பகேஸ், அருண் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 1 கிலோ 600 கிராம் கஞ்சா, 1 கிலோ 110 கிராம் போதை மாத்திரை, ஒரு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள பாபுவை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: போதை ஊசிக்கு அடிமையாகும் இளைஞர்கள் - வைரல் வீடியோ