ETV Bharat / state

15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மூவர் கைது

சென்னை: வீட்டு வேலை செய்துவந்த 15 வயது சிறுமியை ஆசைவார்த்தைக் கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த மூன்று பேர் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டனர்.

பாலியல் வன்கொடுமை செய்த மூவர் போக்சோவில் கைது

author img

By

Published : Mar 2, 2020, 1:46 PM IST

விழுப்புரம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி சுருதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஆறாம் வகுப்பு வரை படித்த இவர் குடும்ப வறுமை காரணமாக சென்னை அடையாறில் உள்ள ஒரு இல்லத்தில் தங்கி பணிப்பெண்ணாக வேலைசெய்து வந்தார்.

இந்நிலையில் பிப்ரவரி 8ஆம் தேதி இரவு 10 மணியளவில் வெளியே சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை என்று வீட்டின் உரிமையாளர் அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் அடையாறு காவல் துறையினர் காணாமல்போன சிறுமியைத் தேடிவந்தனர். மேலும் துண்டுப்பிரசுரங்கள் அச்சிட்டு பல்வேறு பகுதிகளிலும் ஒட்டியுள்ளனர்.

இந்தத் துண்டுப்பிரசுரத்தைப் பார்த்து, ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், காணாமல்போன சிறுமி பாலவாக்கத்தில் சாலையோரம் உள்ள ஒரு தள்ளுவண்டிக் கடையில் பணியாற்றிவருவதாக அடையாறு காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். உடனடியாகப் பாலவாக்கம் சென்று சிறுமியை மீட்ட அடையாறு காவல் துறையினர் வீட்டைவிட்டு வெளியேறிய காரணத்தை விசாரித்தனர்.

பாலியல் வன்கொடுமை செய்த மூவர் போக்சோவில் கைது
பாலியல் வன்கொடுமை செய்த மூவர் போக்சோவில் கைது

அப்போது சிறுமி, தனக்கு சதீஷ் குமார் (24) என்பவருடன் நட்பு இருந்ததாகவும், அவர் ஆசைவார்த்தைகள் கூறி தன்னை துரைப்பாக்கத்திற்கு வரவழைத்து அங்கிருந்து அவரது நண்பர்கள் வினோத், மஹாராஜா ஆகியோருடன் அக்கரை கடற்கரைக்கு அழைத்துச் சென்று வாகனத்தில் வைத்து மூன்று பேரும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறியுள்ளார்.

சிறுமியின் வாக்குமூலத்தை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் சதீஷ் குமார் (24), வினோத் (23), மஹாராஜா (29) ஆகிய மூன்று பேரையும் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்தனர்.

இதையும் படிங்க;

குளிர்பானத்தில் மது... மாணவியைப் பாலியல் வன்புணர்வு செய்த பள்ளி மாணவன் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.