சென்னை: செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரித்திவிராஜ் (25). இவர் இதே பகுதியில் டைல்ஸ் கடையில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் இதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர்களான சந்தோஷ் குமார்(26), குரு பிரசாத்(22), ஆல்பர்ட்(25) ஆகியோருடன் நேற்று முன்தினம்(ஜூன்.27) இரவு எம்.ஏ நகர் ஜிஎன்டி சர்வீஸ் சாலை அருகே ஒரு மறைவிடத்தில் மதுபானம் அருந்தி கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் மூன்று பேரும் சேர்ந்து பிரித்திவிராஜின் தலையில் வெட்டி விட்டு தப்பி ஓடியுட்டனர். இதில் பலத்த காயமடைந்த பிரிதிவிராஜை அருகில் உள்ளவர்கள் காப்பாற்றி, பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து செங்குன்றம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட மூன்று பேரையும் கைது செய்தனர். இதில் சந்தோஷ் குமார் என்பவர் செங்குன்றம் சட்டம்-ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளர் கேசவன் என்பவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா மூன்றாவது அலை முன்னேற்பாடு - ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்த முதலமைச்சர்!