சென்னை மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகே ரவுடிகள் சிலர் மது குடித்துக்கொண்டு சாலையில் பயங்கர ஆயுதங்களுடன் அராஜகம் செய்துகொண்டிருப்பதாக மயிலாப்பூர் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர், ஆயுதங்களுடன் சாலையில் அராஜகம் செய்துகொண்டிருந்த மூன்று ரவுடிகளை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
காவல் துறையினரின் விசாரணையில் இவர்கள் மூவரும் மயிலாப்பூரைச் சேர்ந்த பரத் (எ) சொட்டை பரத், பவித்ரன், பாஸ்கர் என்பது தெரியவந்தது. இவர்கள் ரவுடி சிவக்குமாரின் நெருங்கிய நண்பர்கள் என்பதும் தெரியவந்தது.
இதையும் படிங்க : விமான நிலையத்தில் ஆள்கடத்தல் கும்பலை துப்பாக்கி முனையில் மடக்கிய காவல் துறை!