ETV Bharat / state

வேல்-ஐ கையில் பிடிக்காதவர்கள் இன்று வேல் பிடிக்கின்றனர்- திமுகவை தாக்கிய நிர்மலா சீதாராமன்

வேல் யாத்திரையால் தமிழ்நாடு அரசியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது, தமிழ்நாட்டில் கோயிலுக்கே செல்லாதவர்கள் கோயிலுக்கு செல்லத் தொடங்கி உள்ளனர், வேல்-ஐ கையில் பிடிக்காதவர்கள் இன்று வேல் பிடிக்கின்றனர் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திமுகவை சூசகமாக விமர்சித்துள்ளார்.

finance minister nirmala sitharaman chennai bjp
வேலை கையில் பிடிக்காதவர்கள் இன்று வேல் பிடிக்கின்றனர்- திமுகவை தாக்கிய நிர்மலா சீதாராமன்
author img

By

Published : Feb 19, 2021, 9:33 PM IST

சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதியில் பாஜக வர்த்தகப் பிரிவு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வணிகர்கள், தொழிலதிபர்கள் உடனான கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சிறுகுறு நிறுவன வணிகர்கள், தொழிலதிபர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு மட்டும் ரூ.5 லட்சம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவித்தார்.

நிதியமைச்சருக்கு நன்றி

மேலும், மத்திய நிதி அமைச்சரிடம் வணிகர்கள், சூடத்திற்கு விதிக்கப்பட்டுள்ள 18 விழுக்காடு ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும், பட்டாணி இறக்குமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சென்னையிலிருந்து தென் மாவட்டங்களை இணைக்க 4ஆவது ரயில் முனையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தீப்பெட்டி ஏற்றுமதியை 50 விழுக்காட்டில் இருந்து 80 விழுக்காடாக உயர்த்த உதவ வேண்டும், இலங்கைக்கு செல்லாமல் பிற நாடுகளுக்கு கப்பல்கள் சென்றுவர ஏதுவாக பாதை அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்தனர்.

வோளண் சட்டங்களும், மாடும்

இந்தக் கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு முதன்முதலாக தமிழ்நாட்டுக்கு வந்துள்ளேன். பட்ஜெட்டைப் பற்றி அனைவருக்கும் தெரியும் என்பதால், அது பற்றி விரிவாக பேச வேண்டியதில்லை. பட்ஜெட்டை உருவாக்குவதற்கு முன், ஊரடங்கு நாட்களில் ஆத்ம நிர்பார் தொகுப்பை மத்திய அரசு வரிசையாக வெளியிட்டது. தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், ஊக்குவிக்கவும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டிற்கு ஒன்றுமே செய்யவில்லை- நிர்மலா சீதாராமன்

வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை. இது குறித்து பிரதமரும் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் உற்பத்தியில் உலகிலேயே இந்தியா முன்னணி நாடாக திகழ்கிறது. கூட்டுறவு முறையில் பால் வியாபாரம் செய்பவர்கள் மாட்டை அழைத்துச் சென்று விடுகிறார்களா? மாடு விவசாயிகளிடம் தானே உள்ளது. அதுபோல, வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளின் நிலம் பறிபோய்விடும் என்று மேற்கொள்ளப்படும் பொய் பரப்புரைகளுக்கு எவ்வாறு பதில் கூற முடியும்? பொய் பரப்புரை செய்து அரசியல் செய்யும் சூழல்தான் நாட்டில் உள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் என்பது விவசாயிகளுக்கு ஒரு தேர்வு தான். தேவைப்பட்டால் அதனைப் பின்பற்றாலும், இல்லாவிட்டால் வழக்கம் போல பழைய நடைமுறையைப் பின்பற்றலாம். இ-நாம் போன்ற திட்டங்களும் நடைமுறையில் உள்ளன. வேளாண் சட்டங்களால் வரக்கூடிய தேர்வே எங்களுக்கு வேண்டாம், இடைத்தரகர்களின் ஆதாயம் தான் முக்கியம் என்று சட்டங்களை எதிர்த்து வருகின்றனர். விவசாயிகள், தங்கள் விளைபொருட்களை எங்கு விற்கலாம்? என்ன விலைக்கு விற்கலாம்? என்பதை முடிவு செய்யும் முழு உரிமை அவர்களுக்கே உள்ளது.

பொய் பரப்புரை செய்து அரசியல் செய்யும் சூழல்

விவசாயிகள் பெயரைச் சொல்லிக் கொண்டு, எவ்வளவு பொய் பரப்புரைகள்? விவசாயிகளுக்காகவும், குறைந்த பட்ச ஆதார விலைக்காகவும் முதலைக் கண்ணீர் வடிப்பவர்கள் யார்? போராட்டக் களத்துக்கு சென்று ஆதரவு தெரிவிப்பவர்கள் யார்? இந்தோனேஷியாவில் உள்ள பாலிக்கு சென்று கொள்முதல், பொது விநியோகத்திற்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய உலக வர்த்தக சட்டத்தில் கையெழுத்திட்ட 2013ஆம் ஆண்டில் ஆட்சியில் இருந்த சொரணை இல்லாதவர்கள் தான். தமிழ்நாட்டில் இருந்து பாஜகவுக்கு ஒரு எம்.பி., கூட இல்லாத போதும், தமிழ்நாட்டுக்கு குறை வைக்காமல் செயலாற்றி வருபவர் தான் பிரதமர் மோடி.

வேலை கையில் பிடிக்காதவர்கள் இன்று வேல் பிடிக்கின்றனர்- நிதியமைச்சர்

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை பத்திரமாக தமிழ்நாடு அழைத்து வந்து குடும்பத்தினருடன் சேர்த்தது மோடி அரசு. சாலைகள், ஜவுளிப் பூங்கா, மின்னனு சந்தைகள், மீனவர்களுக்கான துறைமுகம் என்று பல்வேறு திட்டங்களை தமிழ்நாட்டிற்கு தந்தது பாஜக அரசு. 2014ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டுக்கு அதிக திட்டங்களை தந்து கொண்டிருப்பது பாஜக அரசு. 2014க்கு முன், ஆட்சியில் இருந்தவர்கள் தமிழ்நாட்டின் சின்னமாக இருக்கக் கூடிய ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தார்கள். கூடங்குளம், ஜல்லிக்கட்டு என்று தமிழ்நாட்டு முன்னேற்றத்துக்கு இடையூராக இருந்தவர்கள் தான் இன்று மோடி அரசைக் குறை கூறுகின்றனர்.

மோடிக்கு தமிழ்நாட்டு மக்கள் ஆதரவு

தமிழ்நாடு வளர்ச்சியடைய வேண்டும். தமிழ்நாட்டுக்கு நல்லாட்சி கிடைக்க வேண்டும். வேல் யாத்திரையால் தமிழ்நாட்டு அரசியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வேலை கையில் பிடிக்காதவர்கள் இன்று வேல் பிடிக்கின்றனர். பாஜக - அதிமுக கூட்டணி அமைந்துவிட்டதால் தமிழ்நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகளுக்கு ஒருவித பயம் வந்துவிட்டது. தமிழ்நாட்டில் கோயிலுக்கே செல்லாதவர்கள் கோயிலுக்கு செல்லத் தொடங்கி உள்ளனர். தெய்வ வழிபாடு செய்தவர்களை கேலி செய்த தமிழ்நாட்டில் இன்று தெய்வ வழிபாடு மேற்கொள்ள வேண்டும் என்ற மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது, பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டு மக்கள் தங்களின் ஆதரவை வழங்குகின்றனர்" என்றார்.

இதையும் படிங்க: இந்தாண்டு பொருளாதார வளர்ச்சி பூஜ்ஜியம்தான் - நிர்மலா சீதாராமன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.