சென்னை: தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "தமிழ்நாட்டில் மொத்தம் 440 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.
பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பத்தவர்களில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 33 மாணவர்கள் தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இதில் 87 ஆயிரத்து 291 மாணவர்கள், 51 ஆயிரத்து 730 பேர் மாணவிகள்.
ஆன்லைன் மூலம் கலந்தாய்வு
நாளை (செப்.15) முதல் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்தாண்டு ஐந்து கட்டமாக பொறியியல் கலந்தாய்வு நடைபெற்ற உள்ளது.
7.5% இட ஒதுக்கீடு மூலம் பொறியியல் படிப்பில் சேரவுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான சேர்க்கை ஆணையை முதலமைச்சர் செப்.18 ஆம் தேதி வழங்கவுள்ளார். இதற்காக 15 ஆயிரத்து 660 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
கலை,அறிவியல் கல்லூரிகள்
அடுத்த கல்வியாண்டில் புதிதாக 21 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும். கடந்தாண்டு தமிழ்நாட்டில் 461 பொறியியல் கல்லூரிகள் இருந்தன. தற்போது 21 கல்லூரிகளின் அனுமதி மறுக்கப்பட்டதால், 440 கல்லூரிகள் கலந்தாய்வில் பங்கேற்கின்றன" என்றார்.
இதையும் படிங்க: பொறியியல் படிப்பு தரவரிசைப் பட்டியல் வெளியீடு