ETV Bharat / state

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யில் திருவள்ளுவர் இருக்கை தொடக்க விழா - தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை தொடக்க விழா வரும் 15ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலையில்  திருவள்ளுவர் இருக்கை  தொடக்கவிழா

author img

By

Published : Jan 11, 2022, 7:14 PM IST

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலம், மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம் ஆகியவை இணைந்து தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நிறுவியுள்ள 'திருவள்ளுவர் இருக்கை' தொடக்க விழா, திருவள்ளுவர் திருநாள் விழா வரும் 15ஆம் தேதி காலை 11 மணிக்கு நடத்தவுள்ளன

இணைய வழியில் கருத்தரங்கு

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கோ. பார்த்தசாரதி தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதியரசர் ரா. சுரேஷ்குமார், சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு 'திருக்குறளில் வாழ்வியல் சிந்தனைகள்' என்னும் பொருண்மையில் சிறப்புரையாற்ற உள்ளனர்.

மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனச் செயலாளர் சேயோன் அறிமுக உரையும், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலத்தின் இயக்குநர் பாலசுப்பிரமணியன் வரவேற்புரையும் ஆற்றவுள்ளார்.

ஜூம் அப்ளிகேஷன் மூலம் Meeting ID :3562722898 Password: mtsacademy மூலம் பதிவு இணைய வழியில் நடைபெறும் இந்தப் பன்னாட்டுக் கருத்தரங்கில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள், நிர்வாகப் பணியாளர்கள் உள்ளிட்டோரும் பன்னாட்டளவில் தமிழ் ஆர்வலர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டால் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'ஊரடங்கு கட்டுப்பாடு; பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.