ETV Bharat / state

குவாரி விபத்து - பாறைகள் சரிந்து விழும் வீடியோவை வெளியிட்ட காவல் துறை! - பாறைகள் சரிந்து விழும் வீடியோ

திருநெல்வேலியில் விபத்தை ஏற்படுத்திய கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழும் காட்சிகளை காவல் துறையினர் வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

நெல்லை குவாரி விபத்து
நெல்லை குவாரி விபத்து
author img

By

Published : May 23, 2022, 10:57 PM IST

திருநெல்வேலி: அடைமிதிப்பான் குளம் கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் 6 பேர் மாட்டிக்கொண்ட நிலையில் நான்கு பேர் இந்த விபத்தில் உயிரிழந்தனர். இரண்டு பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர். கடைசியாக லாரி ஓட்டுநர் ராஜேந்திரன் என்பவர் நேற்றிரவு (மே 22) சடலமாக மீட்கப்பட்டார்.

இது குறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் இந்த குவாரியில் பல்வேறு விதிமீறல்கள் நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குவாரி உரிமையாளர்களான செல்வராஜ் மற்றும் அவரது மகன் உள்பட நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த குவாரியில் சுமார் 300 அடி ஆழத்திற்கு பாறைகள் தோண்டப்பட்டதால் விபத்து நடைபெற்றுள்ளது. மேலும், பாறைகள் தோண்டும்போது கடைபிடிக்க வேண்டிய எந்த ஒரு பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைபிடிக்கவில்லை என்பதும் தெரியவந்தது.

இதன் காரணமாக மீட்புப் பணிகளிலும் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. தொடர்ந்து பாறைகள் சரிந்துகொண்டே இருந்ததால் இடிபாடுகளிலிருந்து சிக்கியவர்களை மீட்பதில் பெரும் சவால் ஏற்பட்டது. இந்நிலையில் குவாரியில் பாறைகள் சரிந்து விழும் வீடியோ பதிவு ஒன்றை நெல்லை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது.

அதில் சம்பந்தப்பட்ட குவாரியின் மேல் பகுதியில் இருந்து பாறைகள் மளமளவென சரிந்து உள்ளே விழுவது போன்றும் அடுத்த நொடியே குவாரி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளிப்பதும் பதிவாகியுள்ளது. இப்படி ஆபத்தான குவாரியை இயங்க அலுவலர்கள் எப்படி அனுமதித்தார்கள் என்ற கேள்வி சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நெல்லை குவாரி விபத்து

இதையும் படிங்க: நெல்லை குவாரி விபத்தில் சிக்கியிருந்த கடைசி நபரும் சடலமாக மீட்பு; பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.