ETV Bharat / state

1989-இல் சட்டமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு நடந்தது என்ன? - திருநாவுக்கரசர் எம்பி - திருநாவுக்கரசர் எம்பி

Jayalalitha in assembly at 1989: “1989ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் சண்டை நடந்தது உண்மை. ஆனால் கருணாநிதி முகத்தில் குத்தவோ, ஜெயலலிதாவின் சேலையை இழுக்கவோ இல்லை” என திருநாவுக்கரசர் எம்பி தெரிவித்துள்ளார்.

Thirunavukkarasar MP said what happened to jayalalithaa in the TN assembly in 1989
1989ல் சட்டமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு நடந்தது என்ன
author img

By

Published : Aug 13, 2023, 2:34 PM IST

திருநாவுக்கரசர் எம்பி அளித்த பேட்டி

சென்னை: 1989ஆம் ஆண்டில் சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசியபோது தெரிவித்தார். அவர் பேசிய பின்னர் அந்த சம்பவம் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும் திருச்சி எம்பியுமான திருநாவுக்கரசர் செய்தியாளர்களைச் சந்தித்த போது சம்பவம் குறித்து பேசினார்.

அப்போது அவர், “1989ஆம் ஆண்டு சம்பவம் நடந்தது. 35 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் பற்றி பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அரசியலில் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. தமிழிசையும் அரசியலில் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. மூப்பனார் காங்கிரஸ் கட்சித் தலைவர். தமிழிசையின் தந்தை குமரி ஆனந்தன் துணைத் தலைவர்.

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் கருணாநிதி முதலமைச்சர். ஜெயலலிதா பிரதான எதிர்கட்சித் தலைவர். நான் பிரதான எதிர்கட்சியின் துணைத் தலைவர். அப்போது சட்டமன்றத்தில் தற்போது இருப்பதுபோல் ஆளும்கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் இடையே இடைவெளி இருக்காது.

கருணாநிதி, அன்பழகன் இருக்கைக்கு எதிர் வரிசையில் ஜெயலலிதா அருகில் நான், மூப்பனார், குமரி ஆனந்தன் அமர்ந்து இருந்தோம். ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்பதை முன் கூட்டியே அறிந்தவர், பட்ஜெட்டை மேஜை மேல் ஒரு சிறிய டேபிள்போல் வைத்து வாசித்தார்.

போயஸ் கார்டனில் ஜெயலலிதா தலைமையில் நடந்த 26 எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பட்ஜெட் வாசிக்க விடாமல் தடுப்பது என முடிவு எடுக்கப்பட்டது. ஜெயலலிதா ராஜினாமா கடிதம் தொடர்பாக பிரச்னை செய்ய முடிவு எடுக்கப்பட்டது. சட்டமன்றத்தில் கருணாநிதி பட்ஜெட் வாசிக்கும்போது பின்னால் இருந்த ஒரு எம்எல்ஏ பட்ஜெட் புத்தகத்தை இழுத்தார். உடனே, கருணாநிதி சத்தம் போட்டு திரும்பும்போது கண்ணாடி கழுன்று கீழே விழுந்தது. அப்போது அவர் தடுமாறினார்.

உடனே மூத்த அமைச்சர்கள் கருணாநிதியை அழைத்துச் சென்று விட்டனர். பின்னால் இருந்த திமுக எம்எல்ஏக்கள் கருணாநிதி முகத்தில் குத்தி தாக்கி விட்டதாக நினைத்துவிட்டனர். இதனால் பட்ஜெட் புத்தகங்களை வீசினார். நாற்காலி எல்லாம் எடுத்து வீச முடியாது. மைக்கை உடைத்து புத்தகங்களை வீசிக் கொண்டு இருந்தனர்.

ஜெயலலிதாவிற்கு பாதுகாப்பாக நானும் அப்போதைய அதிமுக கொறடா கே.கே.எஸ்.எஸ்.ஆர் நின்றோம். அப்போதும் சில புத்தகங்கள் ஜெயலலிதா தலையில் விழுந்தது. என் மீதும் விழுந்தது. புத்தகம் விழுந்ததால் தலை கலைந்தது உண்மை. வீட்டிற்கு போகலாம் என்றதும், ஜெயலலிதா சரி என்றார். உடனே பாதுகாப்பாக அழைத்து வந்து காரில் ஏற்றி வீட்டிற்கு அழைத்து வந்தோம்.

சண்டை, அசம்பாவிதம் நடந்தது எல்லாம் உண்மைதான். ஆனால், அடிதடியோ ரத்தக் காயங்களோ கிடையாது. கருணாநிதி முகத்தில் குத்திவிட்டதாக திமுகவும், ஜெயலலிதா சேலையைப் பிடித்து இழுத்ததாக அதிமுகவும் பிரச்சாரம் செய்தனர். ஆனால், இந்த இரண்டு சம்பவமும் உண்மை கிடையாது. கருணாநிதி முகத்தில் குத்தவும் இல்லை. ஜெயலலிதா சேலையைப் பிடித்து இழுக்கவும் இல்லை. கூச்சல், குழப்பம், புத்தகங்கள் வீச்சு நடந்ததும் உண்மை. இதுதான் சட்டமன்றத்தில் 35 ஆண்டுகளுக்கு முன் நடந்தது.

அப்போது நடந்ததை பார்த்தவர்கள் நான், மூப்பனார், குமரி ஆனந்தன்தான். மூப்பனார் உயிருடன் இல்லை. குமரி ஆனந்தனை கேட்டால் சொல்லுவார். இது பற்றி குமரி ஆனந்தன் மகள் தமிழிசைக்கு என்ன தெரியும்? நிர்மலா சீதாராமனுக்கும் தெரிய வாய்ப்பு இல்லை. நாடாளுமன்றத்தில் மகாபாரதம், பாஞ்சாலி கதை வந்ததும் நிர்மலா சீதாராமன் ஒரு கதையை சொல்கிறார்.

மணிப்பூரில் இன்னமும் அமைதி திரும்பவில்லை. 100 நாட்களுக்கு மேலாகிவிட்டது. 200 பேருக்கு மேல் கொல்லப்பட்டு உள்ளனர். 40 ஆயிரம் பேர் முகாமில் வைக்கப்பட்டு உள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் கொளுத்தப்பட்டு உள்ளது. இன்னும் அமைதி திரும்பவில்லை. பிரதமர் ஒரு நாள் கூட அங்கு சென்று பார்க்கவில்லை. எந்தவித உணர்ச்சியையும் கூட வெளிக்காட்டவில்லை.

நாடாளுமன்றத்தில் 2 நிமிடம் கூட மணிப்பூர் பற்றி பிரதமர் பேசவில்லை. பேச்சாளர்போல் பேசினாரே தவிர, நாட்டின் பிரதமர் மாதிரி பதில் இல்லாதது வருத்தத்தக்கது. குமரி ஆனந்தன் மீது புத்தகங்கள் வீசியதில் அடிபட்டு இருக்கலாம்” என கூறினார்.

இதையும் படிங்க: ஓய்வூதியம் பெறும் குடும்பத்தினரும் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.