சென்னை: காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் ரஜினிகாந்தை சந்தித்து பேசியுள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழலில் நடிகர் ரஜினிகாந்தை காங்கிரஸ் மக்களவை உறுப்பினரும் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான திருநாவுக்கரசர் சந்தித்து பேசியுள்ளார்.
பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடும்பத்துடன் தனிப்பட்ட முறையிலேயே ரஜினியை சந்தித்ததாகவும், இதில் அரசியல் பேசப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
அதேபோல், ரஜினி ஏதும் ஆலோசனை பெற்றாரா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஆலோசனை பெற வேண்டிய அவசியம் ரஜினிக்கு இருப்பதாகத் தாம் கருதவில்லை என்றும், அனுபவம் வாய்ந்தவர் ரஜினிகாந்த், அவருக்கு ஆலோசனை வழங்க வேண்டியதில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், அதிமுக அணியில் ராஜ்ய சபா உறுப்பினராகும் ஜி.கே. வாசனுக்கு தனது வாழ்த்துகள் என்றும், மற்ற புதிய ராஜ்ய சபா உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகள் எனவும் தெரிவித்துள்ளார்.