திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள பள்ளிவாசலில் காயிதே மில்லத் நினைவிடத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "காயிதே மில்லத் மத நல்லிணக்கம் காத்த மாபெரும் தலைவர். தமிழ் மொழிக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தவர். தமிழ் மொழியை மற்ற மாநிலத்தில் மூன்றாவது மொழியாக ஆக்கவேண்டும் என்ற முதலமைச்சரின் கோரிக்கை நியாயமானது. ஏனென்றால் மற்ற மாநிலத்தில் தமிழ் படிக்க விரும்பும் தமிழர்களுக்கு உதவியாக இருக்கும். ஆனால் தமிழகத்தில் மறைமுகமாக இந்தியை திணிக்கக்கூடாது", என்றார்.