ETV Bharat / state

'ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உரிமை மாநாடு' - திருமுருகன் காந்தி அறிவிப்பு

ஜல்லிக்கட்டை தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக மத்திய அரசு அறிவிக்கக் கோரி, 'ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உரிமை மாநாடு' நாளை (ஜன.07) தாம்பரத்தில் நடக்க உள்ளதாக திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 6, 2023, 11:00 PM IST

சென்னை: 'ஜல்லிக்கட்டை தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்' என்பது குறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று (ஜன.6) சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைக்கும் இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன், பாடலாசிரியர் சினேகன், மே பதினேழு இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அமீர், ஜல்லிக்கட்டு விளையாட்டு நமது பாரம்பரியம். அந்த ஜல்லிக்கட்டை நடத்த தமிழ்நாடு அரசு கொடுத்த அனுமதியை மற்றும் அதற்கான சட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று பாஜகவின் விலங்குகள் நல வாரியம் மற்றும் பீட்டா ஆகிய இரண்டு அமைப்புக்கள் ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும், அந்த வழக்கில், ஜல்லிக்கட்டில் மாடுகள் துன்புறுத்தப்படுகிறது.

ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனு; தீர்ப்பு என்ன? பலருக்கு உயிர் சேதங்கள் ஏற்படுகிறது என்று வாதங்களை முன்வைத்திருக்கின்றனர். வாதங்கள் முடித்து அந்த வழக்கின் இறுதி தீர்ப்பை நோக்கி காத்திருக்கிறோம். இந்த தீர்ப்பு பிப்ரவரி (அ) மார்ச் மாதத்தில் வரலாம். ஆனால், இது தொடர்பான தீர்ப்பு எப்படி வரும். நமக்கு சாதகமாக வருமா என்ற ஐயப்பாடு இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு உலகத்தின் பாரம்பரிய விளையாட்டு: இந்த நிலையில், ஜல்லிக்கட்டு ஒரு பாரம்பரிய விளையாட்டு இல்லை. அதை தடை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் அவர்கள் வாதத்தை முன்வைத்ததாகவும், சங்க இலக்கியங்களிலேயே 'ஏறு தழுவுதல்' குறித்து இருக்கிறது. உலகத்திலேயே ஒரு பாரம்பரிய விளையாட்டு இருக்கிறது என்று சொன்னால் அது ஜல்லிக்கட்டாக தான் இருக்கும்.

ஜல்லிக்கட்டு; தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக அறிவிக்கவும்: ஆனால் இன்றைக்கோ, தடை செய்ய வேண்டிய சூதாட்டத்துக்கு அனுமதி கொடுக்கிறார்கள் என்றும், இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடக்கும். ஆனால், அடுத்த ஆண்டு நடக்குமா என்ற சந்தேகம் இருக்கிறது.‌ இது தொடர்பாக திருமுருகன் காந்தி தலைமையில் நாளை (ஜன.07) தாம்பரத்தில் ஒரு மாநாடு நடக்க இருக்கிறது. ஆரம்ப காலத்தில் இருந்தே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசி வருகிறோம். பாரம்பரிய விளையாட்டில் ஜல்லிக்கட்டை சேர்க்க வேண்டும் என்பது தான் மத்திய அரசுக்கு வைக்கும் கோரிக்கை என்றும் கூறினார்.

செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் அமீர், 'ஜல்லிக்கட்டு நடக்கும் போது, ஜாதிய சிக்கல் இருப்பது குறித்த கேள்விக்கு, எல்லா பண்பாட்டு விளையாட்டிலும் ஜாதிய நிகழ்வுகள் இருக்கத்தான் செய்கிறது. ஜல்லிக்கட்டு மட்டும் இல்லாமல் எல்லா இடங்களிலும் தானே நடக்கிறது எனவும், மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் எந்த ஒரு தனிப்பட்ட ஜாதிய அமைப்பும் இல்லாமல் தமிழர்களாக போராடி தான் வெற்றி பெற்றனர்' என்றார்.

நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை: ஜல்லிக்கட்டு மாநாடு தொடர்பாக பல முறை ஏராளமானவர்கள் உயிரிழந்தது குறித்து பேசியவர், 'உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக உதவிகளை அரசு வழங்க வேண்டும். எல்லா விளையாட்டிலும் பாதிப்புகள் இருப்பதுபோல், இதிலும் இருக்கிறது. ஏகப்பட்ட பாதுகாப்புடன் தான் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. உதாரணமாக ரம்மியை பற்றி பேசிய அவர் ரம்மி விளையாட்டில் கூட மரணம் இருக்கிறது.

அரசு கவனம் செலுத்தும்: யார் மீதும் மரணம் (விளையாட்டு) திணிக்கப்படுவதில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் இழப்பீட்டை எப்படி வாங்குவது என்று கூட தெரியாமல் இருக்கின்றனர் என்பது தொடர்பாக, இந்த விவாதத்தை வாதிப்பதற்கு தமிழ்நாட்டில் சட்டப்பேரவை இருக்கிறது. இதை, தமிழ்நாடு சட்டப்பேரவை மேற்கொள்ளும். இதை, டெல்லி அல்லது ஒன்றிய அரசு கையில் கொடுக்கக்கூடாது. எதை முறைப்படுத்த வேண்டுமோ? அதை தமிழ்நாடு அரசு பண்ணட்டும். தேவை இல்லாதவர்கள் பண்ண வேண்டாம் என்று கூறினார்.

ஜல்லிக்கட்டு முறைப்படுத்தப்பட்ட பின்னர் எல்லாம் சரியாக நடந்து வருகிறது.‌ இந்த விளையாட்டை அவர்கள் விரும்பி தான் ஏற்கிறார்கள். ஆனாலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று சொல்வதில் தவறில்லை. வீர விளையாட்டில் மரணம் ஏற்பட்டால் இழப்பீட்டை அரசு கொடுக்க வேண்டும். அதிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான், அனைவரின் விருப்பம். தமிழ்நாட்டுக்கு சம்பந்தமில்லாதவர்கள், எதற்காக ஜல்லிக்கட்டு பற்றி பேச வேண்டும். ஜல்லிக்கட்டு தமிழர் பண்பாடு இல்லை என்பது தான் நிதிமன்றத்தில் வழக்கில் வைக்கப்பட்டுள்ளது' என்றும் கூறினார்.

'தமிழ்நாடு' என்ற ட்ரெண்ட்: மேலும், தமிழ்நாடு ஆளுநர் முன்வைத்த கருத்தாக , 'தமிழ்நாடு' என்று சொல்லாமல் தமிழகம் என்று சொல்ல வேண்டும் என்று கூறுகிறார் என்று சொன்னதற்கு, அவர் அப்படி சொன்ன பிறகுதான் தமிழ்நாடு என்பது டிரண்டாகி வருகிறது. நீங்கள் தமிழகம் என்று சொல்வதால் நாங்கள் ஒன்றிய அரசு என்று அழைக்கிறோம்.

நம்மால் முடிந்ததை செய்யலாம்: அவரை தொடர்ந்து பேசிய இயக்குநர் வெற்றிமாறன், 'ஜல்லிக்கட்டு என்பது மூன்றாயிரம், நான்காயிரம் ஆண்டுகளாக இருக்கும் விளையாட்டு. தொன்மையான விளையாட்டாக இருக்கும் ஜல்லிக்கட்டு பாரம்பரியத்துடன் நமது இரத்தத்தில் கலந்த விளையாட்டு என்றதுடன், ஜல்லிக்கட்டை தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக அறிவிக்க வேண்டும். இப்போது இருப்பது எப்போதும் இருக்கும் என்று நம்பி கொண்டு இருக்க முடியாது. நம்மால் முடிந்ததை எப்போதும் செய்ய வேண்டும் என்பதுதான்' என்றார்.

தன்னெழுச்சிக்கு அரசு வாய்ப்பளிக்காது: நிகழ்ச்சியில் பேசிய பாடலாசிரியர் சினேகன், 'நமது பண்பாடு விளையாட்டை பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கலாச்சாரம், பண்பாடு மீது அக்கறை கொண்டவர்கள் நாளை நடக்கவிருக்கும் ஜல்லிக்கட்டுக்கான மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும். அமைதியாக சென்று கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் நெருடல் ஏற்பட்டு விடக்கூடாது. மக்களுக்கு நல்வழி படுத்தும் மத்திய, மாநில அரசுகளுக்கு இந்த பொறுப்பு இருக்கிறது எனவும், மீண்டும் தன்னெழுச்சியாக போராட்டம் துவங்காமல் இருப்பதற்கு அரசு நல்ல விதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறினார்.

எல்லாம் பாஜகவின் வேலை: நிகழ்ச்சியில் பேசிய மே பதினேழு இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி, 'ஜல்லிக்கட்டுக்கு எதிராக, அதை தடை செய்ய வேண்டும் என பாஜகவின் விலங்குகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வருகிறது. இதன் மூலம் தமிழர்களின் பண்பாட்டு உரிமையை பறிக்கும் வேலையை பாஜக செய்து வருவதாகவும், இது தமிழ்நாட்டின் மாநில உரிமைக்கு எதிரானது. ஜல்லிக்கட்டு தொடர்பாக தீர்ப்புக்காக காத்திருக்கிறோம்.

இந்த ஜல்லிக்கட்டை, பாரம்பரியமாக, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட பண்பாட்டு நிகழ்வாக இருக்கின்ற ஜல்லிக்கட்டு உரிமையை ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும். இதனால், தீர்ப்பு வருவதற்கு முன்பே அதை ஒரு பாதுகாக்கப்பட்ட, பாரம்பரிய நிகழ்வான ஜல்லிக்கட்டை மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும்.‌ அப்போது தான் ஜல்லிக்கட்டை பாதுகாக்க முடியும். இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடக்கும் ஆனால், அடுத்த வருடம் நடக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

'ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உரிமை மாநாடு': நாளை (ஜன.07) மாலை 4 மணியளவில் தாம்பரத்தில் 'ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உரிமை மாநாடு' நடக்கவுள்ளது. ஒட்டுமொத்த தமிழ்நாடும் போராடி பெற்ற இந்த ஜல்லிக்கட்டு உரிமையை பறிகொடுத்து விடக்கூடாது என்ற அடிப்படையில் இந்த மாநாடு நடக்கவிருக்கிறது. தமிழர்களின் பண்பாட்டு உரிமையில் மத்திய அரசு தலையிட கூடாது.

மீண்டும் மிகப்பெரிய புரட்சி: தமிழ்நாடு அரசு இயற்றும் சட்டங்களை நீக்கும் எந்த முயற்சியையும் ஒன்றிய அரசு எடுக்க கூடாது. தொடர்ந்து பாஜக தமிழர்களுக்கு எதிரான முடிவுகளை எடுத்து வருகிறது. இந்த உரிமை பறிப்புகள் தொடரக்கூடாது. அவ்வாறு தொடர்ந்தால் தமிழ்நாடு மெரினாவில் நடந்தது போன்ற மிகப்பெரிய புரட்சியை தமிழ்நாடு நடத்தும். இந்த விளையாட்டுக்கு திமுக, அதிமுக போன்ற மாநில கட்சிகள் ஆதரவு தந்தாலும் பாஜக மட்டும் தான் எதிர்க்கிறது. அண்ணாமலையும் இது பற்றி ஏதும் சொல்லவில்லை' என்று கூறினார்.

இதையும் படிங்க: Kamal hassan on jallikattu:"மெரினாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த திட்டம்" - கமல்ஹாசன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.