ETV Bharat / state

பட்டியலின மக்களுக்கான பட்ஜெட்டை ஏற்படுத்தாமல் அரசு காலம் தாழ்த்துகிறது: திருமுருகன் காந்தி - Interview

சென்னை: பெரியார் மண்ணில் பட்டியலின மக்களுக்கான தனி பட்ஜெட்டை ஏற்படுத்தாமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை
author img

By

Published : Jul 20, 2019, 10:59 PM IST

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘பட்டியலின மக்களுடைய நலனுக்காக துணை பட்ஜெட் உள்ளது. இந்த பட்ஜெட் ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் உள்ளது. ஆனால் பெரியார் மண்ணிலேயே பட்டியலின மக்களின் பழங்குடியினருக்கான தனி பட்ஜெட்டை இதுவரை ஏற்படுத்தாமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது. அது சட்டமாக்கப்பட வேண்டும்.

சிறுபான்மையினர் மக்கள் மீதும், இஸ்லாமிய மக்கள் மீதும் மத்திய அரசு தொடர்ச்சியாக அடக்குமுறையில் ஈடுபட்டுவருகிறது. தற்போது என்ஐஏ மசோதாவானது இஸ்லாமிய மற்றும் சிறுபான்மையின மக்களை விசாரணை என்ற பெயரில் அதனை பயன்படுத்தி ஒடுக்குமுறையில் ஈடுபட்டு வருகிறது.

என்ஐஏ மசோதாவை குறித்து கருத்தளவில் அதிமுக எம்பிக்கள் எதிர்த்து இருந்தாலே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘பட்டியலின மக்களுடைய நலனுக்காக துணை பட்ஜெட் உள்ளது. இந்த பட்ஜெட் ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் உள்ளது. ஆனால் பெரியார் மண்ணிலேயே பட்டியலின மக்களின் பழங்குடியினருக்கான தனி பட்ஜெட்டை இதுவரை ஏற்படுத்தாமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது. அது சட்டமாக்கப்பட வேண்டும்.

சிறுபான்மையினர் மக்கள் மீதும், இஸ்லாமிய மக்கள் மீதும் மத்திய அரசு தொடர்ச்சியாக அடக்குமுறையில் ஈடுபட்டுவருகிறது. தற்போது என்ஐஏ மசோதாவானது இஸ்லாமிய மற்றும் சிறுபான்மையின மக்களை விசாரணை என்ற பெயரில் அதனை பயன்படுத்தி ஒடுக்குமுறையில் ஈடுபட்டு வருகிறது.

என்ஐஏ மசோதாவை குறித்து கருத்தளவில் அதிமுக எம்பிக்கள் எதிர்த்து இருந்தாலே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றார்.

Intro:கல்வி உரிமை தகுதி அடிப்படையிலானது அல்ல திருமுருகன் காந்தி பேட்டி

கல்வி என்பது வாய்ப்பு அடிப்படை சார்ந்ததே தவிர தகுதி அடிப்படையில் பெறுவது கிடையாது - மே 17 இயக்கத்தைச் சார்ந்த திருமுருகன் காந்தி மதுரை விமான நிலையத்தில் பேட்டிBody:கல்வி உரிமை தகுதி அடிப்படையிலானது அல்ல திருமுருகன் காந்தி பேட்டி

கல்வி என்பது வாய்ப்பு அடிப்படை சார்ந்ததே தவிர தகுதி அடிப்படையில் பெறுவது கிடையாது - மே 17 இயக்கத்தைச் சார்ந்த திருமுருகன் காந்தி மதுரை விமான நிலையத்தில் பேட்டி

மேனுவல் கேரேஜ் என்று சொல்லக்கூடிய மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றக் கூடியது என்பது அவமானத்திற்க்குரியது.

தமிழகத்தில் அம்மக்களுக்கான பாதுகாப்பும், அவர்களுக்கு மாற்று வேலை வாய்ப்பு ஏற்படுத்துவதை இந்த அரசாங்கம் உறுதியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக இருந்து வருகிறது.

அதே தருணத்தில் பட்டியலின மக்களுடைய நலனுக்காக துணை பட்ஜெட் உள்ளது. இதுபோன்ற பட்டியல் இன மக்களுக்கான தனி நிதி ஒதுக்கீடு செய்து அது ஒரு பட்ஜெட் ஆக மாற்ற வேண்டும். இந்த திட்டமானது ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் இருந்து வருகிறது. ஆனால் தமிழ்நாட்டிலேயே பெரியாரின் மண்ணிலே பட்டியலின மக்களின் பழங்குடி இருக்கான தனி பட்ஜெட்டை இதுவரை ஏற்படுத்தாமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது. அது சட்டமாக்கப்பட வேண்டும். எனவே நடைபெற்றுவரும் கூட்டத் தொடரிலேயே சட்டமாக்க வேண்டும்.

தொடர்ந்து பட்டியலின மக்களுக்கான ஒடுக்குமுறை அதிகரித்து வருகிறது. மேலும் ஆணவ படுகொலை அதிகரித்து வருகிறது. இதன் மீது நடவடிக்கை எடுத்துக்கொள் கொள்ளாத அரசு இதே தருணத்தில் மத்திய அரசு தொடர்ச்சியாக பல்வேறு மசோதாக்களை கொண்டு வருகின்றன. குறிப்பாக சிறுபான்மையினர் மக்கள் மீதும் இஸ்லாமிய மக்கள் மீதும் அடக்குமுறை செயலில் தொடர்ச்சியாக மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. தற்போதும் NIA மசோதாவானது இஸ்லாமிய மற்றும் சிறுபான்மையின மக்களை விசாரணை என்ற பெயரில் NIA துறை பயன்படுத்தி ஒடுக்குமுறையில் தான் ஈடுபட்டு வருகிறது.

NIA மசோதாவை குறித்து கருத்தளவில் மக்களவையில் அதிமுக எம்பிக்கள் எதிர்த்து இருந்தாலே இந்த மசோதாவானது நிறைவேற்றப்பட்டிருக்க வாய்ப்பில்லை. மேலவையில் இந்த மசோதா நிறைவேற்றியுள்ளது.

வருமானவரித்துறை, தேர்தல் ஆணையமும் பாஜகவினருக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டது என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் எதிர்ப்பவர்களை ஓடுக்கும் பணியைத்தான் NIA துறையை பயன்படுத்தி பாஜக தொடர்ச்சியாக செய்து வருகிறது.எனவே NIA நடுநிலைத் தன்மை வாய்ந்ததாக இருக்கும் என்பது நம்ப முடியாது.

நீட் தேர்வு பொருத்தவரையில் தமிழகத்தில் உள்ள மருத்துவ படிப்பிற்கான கட்டமைப்புகள் முழுவதுமாக வட இந்தியர்கள் பயன்படுத்தும் விதமாக மாற்றி அமைப்பதற்காக கொண்டுவரப்பட்டது. நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விரோதமாகத்தான் கொண்டு வரப்பட்டது. மேலும் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கு பெரும்பாலானோர் தமிழகத்தில் இருந்து தேர்வாகி வரும் நிலையை மாற்றி அமைப்பதால் கேலியுமாக வேறு வகையிலான தேர்வு முறையை தற்போது அறிமுகம் செய்ய உள்ளார்கள்.

தகுதிதேர்வு கொண்டுவருவதில் உள்நோக்கம் இருப்பதை தான் குற்றச்சாட்டாக முன் வைத்து வருகிறோம். கல்வி என்பது வாய்ப்புஅடிப்படை சார்ந்ததே தவிர தகுதி அடிப்படையில் பெறுவது கிடையாது. தண்ணீர் எவ்வாறு அனைவருக்கும் தேவையான ஒன்று அதைப் போன்று கல்வியும் அனைவருக்கும் தேவையான ஒன்றாகும்.

நடிகர் சூர்யா அவர்கள் புதிய கல்விக் கொள்கையை உள்ள மோசமான கொள்கைகளை தனது கருத்துக்கள் வாயிலாக சிறப்பாக அம்பலப்படுத்தி இருந்தார். தமிழக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் புதிய கல்விக் கொள்கையின் முறையான ஆய்வு இன்றி ஆதரவு தெரிவித்திருப்பது மாணவர்களுக்கு எதிரானது மட்டுமல்லாமல் சமூக நீதிக்கு விரோதமானது.

புதிய கல்விக் கொள்கை திட்டத்தை குறித்து விவாதத்தை மே 17 இயக்கம் அமைச்சர் பெருமக்களுக்களிடையே நேரடியாக பொது மேடையில் விவாதிக்க தயாராக உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அமைச்சர்கள் தயாராக உள்ளார்களா என்ற கேள்வியை முன்வைக்கிறோம்.

உத்திரபிரதேசத்தில் போலீஸ் ஆட்சி நடைபெற்று பழங்குடியின மக்களின் மீதும் போராடக்கூடிய மக்களை துப்பாக்கியால் நசுக்கிவிட முடியாது. ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்துவது உரிமை என்றுஇந்திய அரசியல் சாசனத்தில் உள்ளது. அரசியல் சாசனத்தை மீறுவதற்கு இந்தியாவில் எந்த அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் அதிகாரம் கிடையாது என்று கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.