சென்னை: இன்றைக்கு காவியை விரட்ட, திராவிட தமிழக அரசியலைப் பேணவும், எதிரிகளை அழிக்கவும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் தேவைப்படுகிறார் என திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். அடையாரில் உள்ள 'முத்தமிழறிஞர் பேரவை'-யில் தமிழ்தேசிய தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் 28ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி நேற்று (ஜூன் 11) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், விசிக தலைவர் திருமாவளவன், திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா (A.Raja), திமுக சட்ட மன்ற உறுப்பினர் மயிலை த.வேலு, திராவிடர் கழக பரப்புரை செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் (Pavalareru perunchithiranar) திருவுருவப்படத்தை திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா திறந்து வைத்த அவரின் திருவுருவ சிலையை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் திறந்து வைத்தார். பின்னர் பேசிய திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, “திராவிட இயக்க தலைவர்கள் போற்றிய தனிப்பெரும் அறிஞரை போற்றுவதற்கு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேடையில் பேசிய அனைவரும் அவரின் புகழையும் ஆளுமையும் பேசினார்கள். ஆனால்க் அவரிடம் இருந்து அரசியலை யாரும் பேசவில்லை என வருத்தம் தெரிவித்தார்.
பாரதிதாசனை தமிழோடு மட்டும் அடையாளப்படுத்தி இருந்தால், புரட்சி கவிஞர் கிடைத்திருக்க மாட்டார் என்ற அவர், பாவலரின் தனித்தமிழ் இயக்கம் தொன்மையானது என்றார். இது தமிழிடமிருந்து பிற மொழியை பிரித்து எடுத்து தனி தமிழில் முதன்மைப்படுத்துவதற்கான கொண்டுவரப்பட்ட இயக்கம் என்றும் இவ்வாறு வார்த்தைக்கு வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாமல் வாழ்ந்தவர் தான் பாவலரேறு பெருஞ்சித்திரனார் என்றும் புகழாரம் சூடினார். திராவிட இயக்கமும் தனித்தமிழ் இயக்கமும் தனித்தனியாக இயங்கினாலும் அதன் தனித்து கொண்ட புள்ளியில் பாவலரேறு பெருஞ்சித்திரனார் உயர்ந்துள்ளதாக அவர் புகழ்ந்தார்.
தமிழுக்கு ரூ.10 கோடி மட்டுமே ஒதுக்கீடு: மொழியை காப்பாற்ற வேண்டும் என்று பெருஞ்சித்திரனார் விரும்பியதாகவும், இன்று மத்திய அரசு மொழிக்கு ஒதுக்கீடு செய்த 300 கோடி தொகையில் வெறும் பத்து கோடி தான் தமிழுக்கு ஒதுக்கீடு செய்ததாக குற்றம்சாட்டினார். இன்றைக்கு காவியை விரட்ட, திராவிட தமிழக அரசியலை பேணுவும் எதிரிகளை அழிக்கவும் பெருஞ்சித்திரனார் தேவைப்படுகிறார்” என்று அவர் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “பாவலரேறு கருத்துக்களை அடிக்கடி கேட்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது நினைத்து மகிழ்கிறேன் என்றார். உவமை கவிஞர் சுரதாவிற்கு சிலை வைப்பதற்காக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களிடம் கேட்டபோது, சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்டு இருந்த நிலையில், பரவாயில்லை நான் சிலை வைக்க கருணாநிதி அனுமதித்ததாக கூறினார். இவ்வாறு, தமிழ் அறிஞர்கள் குறித்து எந்த கோரிக்கைகள் வைத்தாலும் உடனே அதற்கு இசைவளிப்பதை இயல்பாக கொண்டவர் கருணாநிதி என்று அவருக்கு புகழாரம் சூடினார்.
ஆரிய, பார்ப்பன எதிர்ப்பு - பாவலரேறு: மேலும் பேசிய அவர், தமிழறிஞர்களின் பங்களிப்பை போற்ற வேண்டும் இளம் தலைமுறைக்கு அவர்களை நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்பதில் தனிக்கவனம் கொண்டிருந்த கருணாநிதிக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருப்பதாக தெரிவித்தார். 'தனித்தமிழ் இயக்கம்' என்பது மொழி பாதுகாப்பு என்பது அல்ல; ஆரிய ஆதிக்க எதிர்ப்பு நடவடிக்கை என புரிந்துகொள்ள வேண்டும் என்றார். ஆரிய, பார்ப்பன எதிர்ப்பை மையமாக கொண்டது தான் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அரசியல் என்று அவர் விளக்கினார்.
தமிழ்தேசியத்தின் எழுச்சி நாள்: இன்று தமிழகத்தில் பலர் 'தமிழ் தேசியம்' (Tamil Desiyam - Tamil Nationalism) பேசிடும் நிலையில் ஆனால், சனாதான எதிர்ப்பில் உறுதியாக இல்லை என்று சாடினார். சாதி பெருமை, நாம் குடி பெருமை எடுத்துக் கொள்ளலாம் என்று பேசுகிறார்கள் என்ற நிலையை பார்க்கின்றோம் என்று அதற்கு உதாரணம் கூறினார். 'சனாதனம்' என்பது சாதி கட்டமைப்பு தகர்க்கின்ற ஒரு போராட்டம் என்றார்.
பாவலரேறு தமிழ் தேசியத்தை சனாதான எதிர்ப்பில் இருந்ததுதான் தொடங்கியதாகவும், சமஸ்கிருதத்திற்கு என்று தனி நிலம் இல்லை என்பதால்தான் பார்ப்பனர்கள் ஒட்டுமொத்த இந்தியாவை தங்களின் தேசமாக ஆக்குவதற்கு முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அதற்கான கோட்பாடாகத்தான் இந்துத்துவ அரசியலை முன் வைப்பதாகவும் ஆகவே, தமிழ்தேசியத்தின் எழுச்சி நாளாக பாவலரேறு பிறந்த நாளை கடைபிடிக்க வேண்டும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: "யார் ஆட்சியில் ஊழல் அதிகம்" - ஸ்டாலினுக்கு சவால் விடுத்த அண்ணாமலை!