ETV Bharat / state

நாட்டில் நடக்கும் சம்பவங்களை திசை திருப்பக் கூடிய வகையில் சீமான் பேச்சு உள்ளது - திருமாவளவன் பேட்டி! - thirumavalavan press meet in chennai airport

விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன், மணிப்பூர் மக்களை பாதுகாக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் எந்த அக்கறையும் எடுக்கவில்லை என்றும் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் தொடர்ந்து மணிப்பூர் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விசிக தலைவர் திருமாவளவன்

author img

By

Published : Aug 4, 2023, 1:20 PM IST

சென்னை: விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு 2 நாள் பயணமாக மணிப்பூர் சென்றோம். மணிப்பூர் முகாம்களில் தங்கி உள்ள 2 தரப்பு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தோம். மத்திய மற்றும் மாநில அரசுகள், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க எந்த அக்கறையும் எடுக்கவில்லை என கூறினார்கள்.

குக்கி சமுதாயத்தை சேர்ந்த 60 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மெய்தி சமூக மக்கள் 8 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கி உள்ளனர். அவர்களுக்கு தன்னார்வ குழுக்கள் உணவு, உடை வழங்கி வருகின்றனர். மாநில அரசு போதிய உதவிகளை வழங்கவில்லை. இது குறித்து கோரிக்கை மனுவை குடியரசு தலைவரிடம் காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமையில் 31 பேர் சந்தித்து வழங்கினோம்.

மணிப்பூர் மக்களுக்கு சுமூகமான சூழ்நிலை வேண்டும். பிரதமர் நேரடியாக சென்று சந்திக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். ஆனால் இந்திய ஒன்றிய ஆட்சியாளர்கள் மணிப்பூரில் சுமூகமான தீர்வை எதிர்பார்க்கவில்லை என்று தெரிகிறது. பிரதமர் மோடி ஒரு முறை வருத்தத்தை பதிவு செய்தார். ஆனால் கருத்து சொல்ல கூட தயாராக இல்லை. நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் தொடர்ந்து மணிப்பூர் குறித்து விவாதிக்க வேண்டும்.

பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கூட பிடிவாதமாக மறுத்து வருகின்றனர். இதனால் நாடாளுமன்றத்தில் கூச்சலும், குழப்பமும் நீடித்து கொண்டு இருக்கிறது. இது வன்மையான கண்டனத்துக்குரியது. மணிப்பூரில் செயற்கையான அமைதி நிலவுகிறது. ஆனால் கிராமப்புறங்களில் வன்முறைகள் தொடர்கின்றது என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். மணிப்பூர் மாநில அரசு செயலிழந்து கிடக்கிறது.

மணிப்பூர் மாநில முதலமைச்சரை உடனே மாற்ற வேண்டும் என குடியரசு தலைவரிடம் வலியுறுத்தி உள்ளோம். எல்லா நாடுகளிலும் சிறுபான்மை பிரிவினர் என ஒரு சமூக பிரிவினர் இருக்கின்றனர். சிறுபான்மையினரை மதத்தின் அடிப்படையில் அடையாளப்படுத்த பார்க்கிறோம். தமிழ்நாட்டில் நாம் மொழி அடிப்படையில் பார்த்தால் தமிழர்கள் தான் பெரும்பான்மை.

அதில் கிறிஸ்துவர்களும், இஸ்லாமியர்களும் பெரும்பான்மைக்குள் வருவார்கள் என மொழி, இன அடிப்படையில் சீமான் வாதத்தை வைக்கிறார். இந்தியாவில் மத அடிப்படையில் பெரும்பான்மை, சிறுபான்மை அரசியல் நடக்கிறது. ஆர்.எஸ்.எஸ் இந்துக்களை பெரும்பான்மை என்றும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவர்கள் சிறுபான்மை என்றும் பெரும்பான்மை சமூகத்தை சார்ந்தவர்கள் சொல்லும் படி தான் கட்டுபட்டு நடக்க வேண்டும் என அரசியல் செய்கிறார்கள்.

அந்த அரசியலை திசை திருப்புவதாக இருக்கிறது. சீமான் சொல்வதில் லாஜிக் இருக்கிறது. ஆனால் நடைமுறை சாத்தியமாக எந்த அரசியல் கூறும் இல்லை. உலகம் முழுவதும் மத அடிப்படையில் தான் பெரும்பான்மை, சிறுபான்மை பார்க்கிறார்கள். மொழி அடிப்படையில் தேசிய இன முரண்கள் உள்ளது என்றாலும் கூட மொழி, இன அடிப்படையில் சிறுபான்மை இருக்கிறார்கள் என்றாலும் கூட மத அடிப்படை வாதம் எல்லா நாடுகளிலும் இருக்கின்றன.

அது தான் இந்தியாவிலும் இருக்கிறது. இந்தியாவில் மத அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் உள்பட சங்பரிவார் கும்பல் கையில் எடுத்து அவர்களுக்கு எதிரான வன்முறையை தூண்டி விடுகின்றனர். இஸ்லாமியர்கள் என்பதற்காக ஹரியானா, ஜெய்ப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் ரயிலில் வைத்து சுட்டு கொன்றார்கள்.

அதே போல் மணிப்பூரில் நடந்த வன்முறையில் கூட மொழி வேறுபாடுகள் இருந்தாலும், இன அடிப்படையில் வேறுபாடுகள் இருந்தாலும், கிறிஸ்துவர்கள், இந்துக்கள் என்ற முரண்பாடு தான் வன்முறைக்கு வழிவகுத்தன. வன்முறைக்கு பல காரணங்கள் இருந்தாலும் பிளவுப்படுத்த மதம் தான் கூறாக இருக்கிறது.

இவற்றை திசை திருப்புவதாக அமைந்த சீமானின் பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது. அவர் சங்பரிவார்களின் அரசியலுக்கு செயல் திட்டங்களுக்கு துணை போகிற வகையில் கருத்துகளை பேசி வருவது மிகவும் ஆபத்தானது. சிறைவாசிகளை விடுதலை செய்வது குறித்து நீதிபதி தலைமையிலான குழுவை முதலமைச்சர் அமைத்து உள்ளார்.

அந்த குழு அறிக்கையை அளித்திருப்பதாக தெரிகிறது. அந்த அறிக்கையின் அடிப்படையில் முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் மட்டுமின்றி விடுதலை சிறுத்தைகள் கட்சியும் வலியுறுத்தி வருகிறது. அனைவரையும் விடுதலை செய்ய அந்த குழு பரிந்துரைத்திருக்கும் என நம்புகிறோம்” என்றுக் கூறினார்.

இதையும் படிங்க: கூட்டாட்சி தத்துவத்தை பாஜக ஆட்சி கேலிக்கூத்தாக்கிவிட்டது - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.