தமிழ்நாடு பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு காவி வர்ணம் பூசிய புகைப்படத்தை பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை திமுக, விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இதனைத்தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் பூதாகரமாக வெடித்தது.
இதற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விசிக கட்சியின் சார்பில் நவம்பர் 11ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருவள்ளுவர் சிலை அவமதிப்பு கண்டிக்கத்தக்கது. அதைச் செய்த மர்ம நபர்கள் மீது அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவள்ளுவர் சாதி, மதம், இனம், மொழி, தேசம் அனைத்திற்கும் அப்பாற்பட்டவர். உலக மனிதர்களை வழிநடத்தும் மகத்தானவரை ஒரு மதத்திற்குள் கொண்டு வர நினைப்பதை ஒரு போதும் ஏற்க முடியாது" எனக் கூறியுள்ளார்.