சென்னை: மனு ஸ்மிருதியை மேற்கோள்காட்டி பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக திருமாவளவனுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
மனுஸ்மிருதியை மேற்கோள்காட்டி, பெண்கள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு வலுத்தது. மக்களவை விதிகளுக்கு மீறி செயல்பட்டுள்ள திருமாவளவனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, லோக்சபா விதிகள் குழுவுக்கு உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த லட்சுமி சுரேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், "சனாதன தர்மத்தில் பெண்கள் இழிவுபடுத்தவில்லை. அந்த கருத்தை திருமாவளவன் திரித்து கூறியுள்ளார். அதன் மூலம் பதவிப் பிரமாண உறுதிமொழியை மீறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு விசாரித்தது. அப்போது, திருமாவளவன் பேச்சு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலிக்கும்படி, விதிகள் குழுவுக்கு நீதிமன்றம் எப்படி உத்தரவிட முடியும் எனவும் திருமாவளவன் மட்டும் தான் பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவித்திருக்கிறாரா? எனவும் கேள்வி எழுப்பினர்.
தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆஜரான அரசு பிளீடர், திருமாவளவனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை நடந்து வருவதாகவும், இரண்டு மாதங்களில் விசாரணை முடிக்கப்படும் என்றும் அவரது பேச்சு அடங்கிய வீடியோவை முடக்கும்படி கூகுள் நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: மதுரவாயல்- வாலாஜா நெடுஞ்சாலையில் 50 சதவீத சுங்க கட்டணம் வசூலிக்க உத்தரவு