சென்னை: 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கு முன்னர் கவனிக்க வேண்டியவைகள் குறித்து கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அவர் கூறியதாவது, “அறிவியல் பிரிவு மாணவர்கள் முதலில் மருத்துவமா? பொறியியல் படிப்பா என்பதை முடிவு செய்ய வேண்டும்.
மருத்துவப்படிப்பில் சேர வேண்டும் என்றால், நீட் தேர்வு பயிற்சியில் சேர்ந்து, பொதுப்பிரிவினர் 585 மதிப்பெண்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பிற்னர் 540 முதல் 550 மதிப்பெண்களும், எம்பிசி பிரிவினர் 510 முதல் 520 மதிப்பெண்களும், எஸ்சி பிரிவினர் 430 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால் அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கும்.
இதற்கு 30 மதிப்பெண்கள் குறைவாக பெற்றால் எம்பிபிஎஸ் படிப்பில் தனியார் கல்லூரியில் கட்டணம் செலுத்தி படிக்க வேண்டும். பொறியியல் படிப்பில் சேர்வதற்கு மாணவர்களும், பெற்றோர்களும் சிறந்த கல்லூரிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
கல்லூரியில் பாடத்தை தாண்டி கற்பிக்கிறார்களா என்பதையும், வேலை வாய்ப்பு முகாமினை நடத்தி பணி ஆணை வழங்குகிறார்களா என்பதையும், பிற நாட்டு மொழிகளை கற்றுத் தருகின்றார்களா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தொழிற்சாலைக்கு தேவையான முறையில் கற்றுத் தருகிறார்களா என்பதையும் கண்டறிந்து சேர வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: நாளை முதல் 12ஆம் வகுப்புகள் தொடக்கம்