சென்னை கீழ்ப்பாக்கம் சைபர் கிரைம் பிரிவில் பணிபுரிபவர் காவலர் தினேஷ்குமார்(28). நேற்றிரவு (ஜன.11) கீழ்ப்பாக்கம் ராஜரத்தினம் தெரு அருகே இவர் செல்ஃபோனில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் இவரிடமிருந்து செல்ஃபோனை பறித்து சென்றனர். இதுகுறித்து சிசிடிவி கேமரா காட்சியை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அதில் சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகே அந்த நபர்கள் வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதும் பதிவாகியிருந்தது.
தற்போது இதில் தொடர்புடைய சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அரவிந்த் ஆகிய இரண்டு பேரை 42 மணி நேரத்தில் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காவலர்களிடம் நாடகமாடி தப்பிய செல்போன் திருடன்!