ETV Bharat / state

அண்ணா பல்கலைக்கழகத்தை 2ஆக பிரிக்கும் முடிவில் மாற்றமில்லை - அமைச்சர் அன்பழகன் - higher education minister k.b anbalagan

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கும் தமிழ்நாடு அரசின் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை என அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.

k.b.anbalagan
k.b.anbalagan
author img

By

Published : Sep 28, 2020, 10:23 PM IST

பொறியியல் படிப்பில் சேரவுள்ள மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர், "அண்ணா பல்கலைக்கழகம் இணைப்புக் கல்லூரிகளையும் சேர்த்துதான் செயல்பட்டுவருகிறது. இணைப்புக் கல்லூரிகள் நிர்வாகத்திற்காக அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரிக்கிறோம்.

புதிதாகப் பிரிக்கும் பல்கலைக்கழகத்திற்கும் அண்ணாவின் பெயரே உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிகளை மாநில அரசின் நிதியின் மூலமே அதிகரிக்க அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் என உருவாக்கியுள்ளோம்.

இங்கு ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதற்காகவே பிரிக்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக நடவடிக்கைகளில் உயர் கல்வித் துறை பங்கேற்க முடியவில்லை என்பது தவறான குற்றச்சாட்டாகும். தவறு ஏற்பட்டால் அதைக் கேட்கக்கூடிய அதிகாரம் அரசுக்கு இருக்கிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டங்களில் உயர் கல்வித் துறை செயலாளர் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். பேராசிரியர்கள் கூறுகிறார்கள் என்பதற்காக அரசின் நிலைப்பாட்டை மாற்ற முடியாது" என்றார்.

இதையும் படிங்க: அதிமுகவின் இரட்டை வேடத்தை மக்கள் புரிந்துகொள்வார்கள் - திருமாவளவன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.